என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு
சேலம்:
இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள பொது மருத்துவ அலுவலர், கோட்ட உதவி மருத்துவ அலுவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு -2022 அறிவிப்பு யு.பி.எஸ்.சி. கடந்த ஏப்ரல் மாதம் 4-ந்தேதி அறிவித்தது. இதற்கான கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்ப–தாரர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வில் தேர்ச்சி பெற்றதும் எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் ரத்து செய்யப்படும்.
சேலம், நாமக்கல்..
இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் படித்து முடித்த டாக்டர்கள் பலர் விண்ணப்பித்தனர்.
குறிப்பாக தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், கூடுதல் மருத்துவ கல்வி தகுதி பெற்ற டாக்டர்கள், மருத்துவ துறைகளில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்களை 04.05.2022 முதல் 10.05.2022 மாலை 6 மணி வரை திரும்ப பெற வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்வு இந்த நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ பணி தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் யு.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைத்துள்ளது. இதனால் இந்த 2 தேர்வு மையங்களிலும் தேர்வு நாளன்று டாக்டர்கள் கூட்டம் அதிக எண்ணக்கையில் இருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு இ-அட்மிட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது.
தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டுடன் ஒரு புகைப்பட அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் அல்லது மாநில, மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
இந்த புகைப்பட அடையாள அட்டையின் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தபோது கொடுத்த தகவலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என யு.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்