என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரத்தில் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்
- தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன
- போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன
தென்காசி:
தென்காசி மாவட்ட பொதிகை சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில் பாவூர்சத்திரத்தில் பொதிகை சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.போட்டிகள் பொதுப்பிரிவு, 15,11 வயது பிரிவு, புதிய வீரர்கள் பிரிவு என 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. சதுரங்க கழக செயலர் வைகைகுமார் முன்னிலையில், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியின் நடுவர்களாக ராஜகாந்தன், அருண்குமார், வைதேகி ஆகியோர் செயல்பட்டனர்.
15வயது மாணவர்கள் பிரிவில் தென்காசி ஆர்.சி. வீரமாமுனிவர் பள்ளி மாணவன் சுபாஷ், மாணவியர் பிரிவில் கடையம் அரசு பள்ளி மாணவி அக்ஷயா, 11வயது பிரிவில் செங்கோட்டை அரசு பள்ளி மாணவன் ஜெனோவின், மாணவிகள் பிரிவில் கல்லூரணி தேவி பள்ளி மாணவி பிரபாஷினி ஆகியோர் மாவட்ட பொதிகை சாம்பியன்களாக வெற்றி பெற்றனர்.இவர்கள் அனைவரும் பொதிகை சதுரங்க கோப்பை மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் பொதுப்பிரிவில் அம்பை கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவன் சாம்ஜெப்ரி, புதிய வீரர்கள் பிரிவில் சுரண்டை அரசு பள்ளி மாணவன் கேசவன் முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது. 8 வயதுக்குட்பட்ட 14 வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மூத்த சதுரங்க வீரர் பால கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணிவண்ணன், சதுரங்க ஆர்வலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சதுரங்க கழக இயக்குனர் கண்ணன் செய்திருந்தார்.