என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுரண்டையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வு பேரணியானது சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கியது.
- மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.
சுரண்டை:
சுரண்டையில் மனித உரிமை களம் மற்றும் காப்புக்களம் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. சுரண்டை பொட்டல் மாடசாமி கோவிலில் இருந்து தொடங்கிய பேரணிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். காப்புக்களம் இயக்குனர் பரதன் முன்னிலை வகித்தார்.
வளமான எதிர்காலம்
இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசுகையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகள் கையில் தான் இந்தியாவில் வளமான எதிர்காலம் உள்ளது.
அவர்களின் கல்விக்காகவே மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், ராஜ்குமார், சாந்தி தேவேந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் எஸ்.ஆர். பால்துரை, கந்தையா, ராஜன், பிரபாகர், காப்புக்களம் நிர்வாகிகள் சந்திரா பரமேஸ்வரி, வர்க்கீஸ் ராணி மற்றும் மஸ்தூர் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.