search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் கோவில் தேரோட்டம்
    X

    மகாராசேசுவரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் கோவில் தேரோட்டம்

    • வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள கண்ணனூர் கிராமம் நம்பி ஆற்றின் கரையில் அய்யப்பனின் அவதாரம் என்று அழைக்கப்படும் சித்தூர் தென்கரை மகா ராசேசுவரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருவிழா வான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. மகாராசேசு வரர் சுவாமி தேரில் எழுந் தருளினார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தை தொடர்ந்து வில்வனம்பு தூர், கண்ண நல்லூர், தங்கையம், இளங்குளம் தலைவர்மார் சமுதாயத்தின் குதிரை ஓட்டமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு கும்பாபி ஷேகம் மற்றும் ஆராதனை களும், இரவு சுவாமி புலி வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

    இன்று இரவு சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும், 7-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன், இரவு கொடியிறக்கம் நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கோபாலன், தக்கார் லதா, செயல் அலுவலர் பொன்னி மற்றும் கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகா ராசன்செய்துள்ளனர்.

    வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், இன்ஸ் பெக்டர் சாகுல் ஹமீது பாதுகாப்பு பணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×