என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்: நடுரோட்டில் நாற்று நட்டு போராட்டம்
- சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
- மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டு குழியுமாக உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் குண்டு குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் திடீரென்று குட்டை போல் நின்றிருந்த மழை நீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்கா விட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர் . பின்னர் சிறிது நேரத்தில் சிறைபிடித்த அரசு பஸ்ைசை விடுவித்து நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.