search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி - கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு
    X

    ஆறுமுகநேரியில் விளையாட்டு மைதானம் அமைவதற்கான இடத்தை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் உள்ளனர்.

    ஆறுமுகநேரி அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி - கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு

    • பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிகளை மேற்கொ ள்வதற்காக நேற்று ஆறுமுக நேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் இப்பகுதி மாணவ, மாணவி களின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை பார்வையிட்டார்.

    நாசரேத் அருகே உள்ள கடம்பாகுளத்தின் உபரிநீர் வடிகால் வாய்க்கால் குரும்பூர், வரண்டியவேல், தலைவன்வடலி வழியாக கடலில் சென்று கலக்கிறது. முன்பு ஆறு போல் சென்ற இந்த வாய்க்கால் காலப் போக்கில் ஆக்கிரமிப்பு காரண மாக ஓடை போல் குறுகி விட்டது. இதனை மீண்டும் அகலப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளையும் கலெக்டர் நேற்று பார்வை யிட்டு வாய்க் கால் ஆக்கிர மிப்பில் உள்ள வயல்கள் மற்றும் உப்பள ங்களை முழு மையாக அகற்றி விட அதிகாரி களுக்கு அறி வுறுத்தினார்.

    ஆய்வின் போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வா மணன், பொ துப் பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற் பொறியாளர் மாரியப்பன், ஆத்தூர் பேரூ ராட்சி தலைவர் கமால்தீன், விவசாய சங்கத் தலைவர் செல் வம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முரு கானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ரவிச் சந்திரன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×