என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஏற்பு
- 983 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்ற, இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.
திருவாரூர்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைதியின் சின்னமான புறாவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பறக்க விட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்துமைக்காக காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை மருத்துவ துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த 81 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வேளாண்மை துறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக பாதுகாப்பு திட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மூலம் 983 பயனாளிகளுக்கு 4 கோடியே 18 லட்சத்து 88 ஆயிரத்து 383 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும் திருவிடைமருதூரைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மனைவி 69 வயதான வனஜா என்பவர் தனது ஒரு மாத ஓய்வூதியத்தை ராணுவ வீரர்களுக்கு அளிக்க கூறி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் அளித்தார்.கலியபெருமாள் ஆடுதுறையில் வேளாண்மை துறையில் அலுவலராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.அவரது இறப்பிற்கு பிறகு ஓய்வூதியத் தொகை அவரது மனைவியான வனஜாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது ஒரு மாத ஓய்வூதிய பணமான ரூ. 15,000 ராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ளார் வனஜா.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள வளநாடு பகுதியில் பிறந்தவர் வனஜா என்பதால் தனது சொந்த மாவட்டத்தில் இதை வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில் திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் இதனை அளித்ததாக வனஜா தெரிவித்தார்.அவர் அந்த பணத்தை மாவட்ட கலெக்டரிடம் கொடுக்கும் போது அனைவரும் கைத்தட்டி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்