search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    கீழ் பழைய காலனி- ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர் உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    நல்லூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

    • அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
    • ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் வாயி லாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ், ஆய்வு செய்தார். நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேவூர்- அகரம் சாலை ரூ.93.75 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கி.மீ. சாலை பணிகள் நடைபெறுவதையும், பூலாம்பாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.21 லட்சம் மதிப்பீட்டில் ஊர்குளம் புனரமைப்பு பணிகள் நடைபெறு வதையும், பூலாம்பாடி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.151.93 லட்சம் மதிப்பீட்டில் 3.17 கி.மீ. நீளத்திற்கு கலியமேடு - வரம்பனூர் சாலை பணிகள் நடை பெறுவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் அவ்ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் காளிமாமேடு நடுஏரி ஒடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வேப்பூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பழைய காலணி - ஒட்டஞ்சாலை வாய்க்காலில் நீர்உறிஞ்சி குழி வெட்டும் பணிகள் நடை பெறுவதை யும், சிறுநெசலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6.84 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கப்பட்டு ள்ளதையும் பார்வையி ட்டார்.

    அவ்ஊராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.48 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17.5 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கீழக்குறிச்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.98 லட்சம் மதிப்பீட்டில் 1.27 கிலோ மீட்டர் நீளத்திற்கு கீழக்குறிச்சி - ஜாயேந்தல் சாலை பணிகள் நடை பெறுவதையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    ஐவதுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு குழந்தையே பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.65 இலட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், நகர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாவிலைக்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிகாமணி, ஜெயகுமாரி , உதவி பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    Next Story
    ×