search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில்  காலை உணவு திட்டத்தை  கலெக்டர்- எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட காட்சி.

    விளாத்திகுளத்தில் காலை உணவு திட்டத்தை கலெக்டர்- எம்.எல்.ஏ. ஆய்வு

    • விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.
    • பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    விளாத்திகுளம்:

    தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்1-ம் முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.

    மேலும் பள்ளியில் சமையலராக வேலை செய்யும் ஒருவரிடம் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை நகம் வெட்ட வேண்டும் தலையில் தொப்பி அணிய வேண்டும் என பல்வேறு வழிமுறை ஆலோசனைகளை வழங்கி உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீனிவாசன், தாசில்தார் ராமகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி, சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உட்பட துறை சார்ந்த அதிகாரி கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×