என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசின் கடனுதவிகளை பெற்று தொழிலதிபர்களாக மாற வேண்டும் கலெக்டர் விசாகன் பேச்சு
- திண்டுக்கல் மாவட்டம், அகரம் பகுதியில் மனுநீதி நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம், அகரம் பகுதியில் மனுநீதி நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட கலெக்டர் விசாகன் பங்கேற்று அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்வதை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து வருவாய்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
இம்முகாமில் கலெக்டர் பேசியதாவது,
திண்டுக்கல் அகரம் பகுதியில் அடுத்த மாதம் மனுநீதி நாள் முகாம் நடத்தப்படவுள்ளது. அதன் முன்னோடியாக இன்று முதல் 3 தினங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வீடு வேண்டுதல், வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளார்கள். தகுதியான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, இலவச வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பயன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும். குறிப்பாக வீட்டுமனை இல்லாத குடும்பங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்திட வேண்டும்.
தகுதியுள்ள நபர்கள் விடுபடாமல் அனைவருக்கும் அரசு திட்டங்கள் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மூலம் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உள்ளது. ரூ.1 கோடியிலான கடனுதவிக்கு ரூ.5 லட்சம் முன்வைப்பு தொகை செலுத்தும் வகையிலான திட்டங்களும் உள்ளது. மேலும், நீட்ஸ் உள்ளிட்ட மானியத்துடன் கூடிய கடனுதவிகளும் பல உள்ளது.
அவைகளை பொதுமக்கள் தெரிந்து கொண்டு கடனுதவிகளை பெற்று தொழில் அதிபராக மாற வேண்டும். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை வேண்டி அதிக அளவிலான மனுக்கள் வரபெற்றுள்ளது. தகுதியான அனைவருக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், இம்முகாமில் அனைத்து துறை தொடர்பான மனுக்களும் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் லதா, கோட்டாட்சியர் பிரேம்குமார், துணை ஆட்சியர் ராஜசேகரன், மேற்கு வட்டாட்சியர் ரமேஷ்பாபு, சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அபுரீஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் சுல்தான் சிக்கந்தர், தி.மு.க ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், செயல்அலுவலர் ஈஸ்வரி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவர் கவிதாசின்னதம்பி, துணைத்தலைவர் நாகப்பன், செயல்அலுவலர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்