search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க கலெக்டர் வேண்டுகோள்
    X

    பொதுமக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க கலெக்டர் வேண்டுகோள்

    • தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி
    • கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் எச்சரிக்கை

    கோவை :

    கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பெயரில் போலியான வாட்ஸ் அப் ஐ.டி தொடங்கி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக கலெக்டர், தனது டுவிட்டர் பக்கத்தில் சில மோசடி நபர்கள் தனது புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்து போலியான வாட்ஸ் அப் எண்ணில் அமேசான் பரிசு கூப்பன் இருக்கிறது.பணம் கொடுத்து இந்த கூப்பன் வாங்கி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். இது போலியான ஐ.டி யாரும் இதில் பணம் தர வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த மோசடி தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    மோசடி நபர் பயன்படுத்திய செல்போன் எண் விவரங்களையும் கலெக் டர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கலெக்டர் படம், பெயரை பயன்படுத்தி மோசடி கும்பல் கைவரிசை காட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த மோசடி நபர் யாரிடம் எவ்வளவு பணம் வசூலித்தார், எவ்வளவு மோசடி நடந்தது என்ற விவரங் கள் தெரியவில்லை. இது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்து ள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாட்ஸ் அப் எண் எனக்கூறி கொண்டு மர்ம நபர்கள் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் சிலரின் தொலைபேசி எண்ணிற்கு தவறான தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பி பண மோசடியில் ஈடுபடும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தெரியவருகிறது.

    மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது போலீசார் மூலம் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    மேலும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறி யப்பட்டால் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கலெக்டரின் பெயர், புகைப்படத்துடன் தெரியாத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம். ஏதேனும் பொய்யான தகவல்கள் வந்தாலும் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×