என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழப்பாவூர் பெரியகுளத்தில் புதிதாக படகு குழாம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
- படகு குழாம் அமைப்பதால் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும்.
- கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பேரூராட்சியின் மையப்பகுதியில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளமான கீழப்பாவூர் பெரியகுளத்தில் சுற்றுலாத்துறை மூலமாக புதியதாக படகு குழாம் அமைப்பது குறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், சுற்றுலாதுறை வளர்ச்சி அலுவலர் சீதாராமன் ஆகியோர் முன்ஆய்வு பணி மேற்கொண்டனர்.
இதில் கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கீழப்பாவூரில் படகு குழாம் அமைப்பதால் கீழப்பாவூர் பேரூராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவது மட்டுமின்றி தென்காசியில் சுற்றுலாத்துறை மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்கும் என அவர்கள் கூறினர்.
தொடர்ந்து கீழப்பாவூர் பெரியகுளத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டு வரும் கீழப்பாவூர் - நாகல்குளம் இணைப்பு பாலம் கட்டுமான பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.