search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரியில் விற்பனைக்கு வந்து  உள்ள விநாயகர் சிலைகள்
    X

    விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

    சூளகிரியில் விற்பனைக்கு வந்து உள்ள விநாயகர் சிலைகள்

    • விநாயகர் சிலைகளை ராயக்கோட்டை, கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார்.
    • விநாயகர் சிலைகள் 1 அடியில் இருந்து 15 அடி உயரம் வரை உள்ளது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பகுதியில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.

    விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில் ஓசூர்-சூளகிரி சாலையில் கேசவன் காம்பிளஸ்சில் சப்படியை சேர்ந்த வியாபாரி லோகேஷ் என்பவர் விநாயகர் சிலைகளை ராயக்கோட்டை, கர்நாடகா பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார்.

    விநாயகர் சிலைகள் 1 அடியில் இருந்து 15 அடி உயரம் வரை உள்ளது. தரத்திற்கு ஏற்றார்போல் ரூ.100 -ல் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×