search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு தர்ணா போராட்டம்
    X

     தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர். 

    இந்திய கம்யூனிஸ்டு தர்ணா போராட்டம்

    • பணி நியமனங்களில் முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை விரைவுபடுத்த வேண்டும்.
    • நாளை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை போராட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியர் பணி நியமனங்களில் முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை விரைவுபடுத்த வேண்டும்.

    மறுபடியும் நேர்காணல் நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இரண்டு தரப்பினரையும் அமைதி பேச்சு வார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்தனர்.

    அதன் அடிப்படையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    ஆனால் கல்வி இணை இயக்குனர் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து அங்கு காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதன் பிறகு மண்டல கல்லூரி இணை இயக்குனர் அலுவலகத்தின் பிரதிநிதியாக துணை இயக்குநர் வருகை தந்தார்.

    அதன் பிறகு தர்ணா போராட்டம் கைவிடப்பட்டு இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், தெற்கு மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிர மணியன், தஞ்சை மாநகர செயலாளர் பிரபாகர், ஏஐடியுசி மாநில செயலாளர் தில்லைவனம், நிர்வாகிகள் சேவையா, துரை.மதிவாணன், முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×