என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு விழா
- விழாவில் கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
- அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ்வித்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பல்நோக்கு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் மங்கள நாயகி தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணி கண்டன், துணை சேர்மன் செல்வக் கொடி ராஜாமணி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் முத்துலெட்சுமி அன்பழகன், பள்ளி சிறார் மருத்துவர் சித்ரா, நெட்டூர் வட்டார சுகாதார மேற்பார் வை யாளர் கங்காதரன், புள்ளி யல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் ஆகி யோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டனர். விழாவில் கர்ப்பிணி களுக்கு வளையல் அணி வித்து வளைகாப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடை பெற்றது. சேலை, பழ ங்கள்,சத்துமாவு அடங்கிய சீர் வரிசைகள் வழங்க ப்பட்டது. 5 வகை யான உணவுகள் வழங்க ப்பட்டது.
இதில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடனமாடி கர்ப்பிணிகளை மகிழ் வித்தனர். விழாவில் பங்கேற்றவர்கள் அர்சதை தூவி கர்ப்பிணிகளுக்கு ஆசி வழங்கினர்.