என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விநாயகர் சிலை பிரதிஷ்டை :ஊட்டியில் போலீசார் கொடிஅணிவகுப்பு
- கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
- கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் விமரிசையாக நடப்பது வழக்கம் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அங்கு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இந்து முன்னணி சார்பில் ஊட்டி நகர பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர், குன்னூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
கோத்தகிரியில் அனுமன் சேனா சார்பில் 30 சிலைகள் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. இதுதரவி பல்வேறு கிராம பகுதிகளில் பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்க ப்படுகிறது. அனுமன் சேனா, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் வருகிற 21-ந் தேதி விநாயகர் சிலைகள் கரைக்கப்ப டுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து ள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்ப ட்டுள்ளது. ஊர்வலத்தின் போது பதட்டமாக கண்டறி யப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 1000 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வெளி மாவட்ட போலீசார் வர வழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊட்டியில் நேற்று நடந்தது. தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய அணிவகுப்பு, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, அப்பர் பஜார், மெயின் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையத்தை சென்ற டைந்தது.
அதேபோல காந்தலிலும் அணிவகுப்பு நடத்தப்ப ட்டது. இந்த அணிவகுப்பில் ஆயுதம் ஏந்திய போலீசார் பங்கேற்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்த ராஜன், டி.எஸ்.பி.க்கள் யசோதா, விஜயலட்சுமி மற்றும் காவல்துறை உயர்அ திகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்