search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் முதுநகரில்  பஸ் நிறுத்தத்தில் ரூ.15 லட்சத்தில் பயணியர்  நிழற்குடை அமைக்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு
    X

    கடலூர் முதுநகரில் பயணியர் நிழற்குடை அமைப்பதை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு செய்தார். அருகில் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா உள்ளார். 

    கடலூர் முதுநகரில் பஸ் நிறுத்தத்தில் ரூ.15 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி: மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு

    • வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.
    • மேயர் சுந்தரி ராஜா 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் பஸ் நிறுத்தம் இருந்து வருகின்றது. இவ்வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் சென்று வருவதால் ஏராளமான பொதுமக்கள்பஸ் நிறுத்தத்தில் நின்று சென்று வருகின்றனர். இந்த நிலையில் பல ஆண்டுகளாக பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து நின்று வந்தனர்.

    மேலும் பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் பொதுமக்கள் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இன்று காலை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அரசு அறிவித்த கால கெடுவிற்குள் பணிகளை தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், பகுதி துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×