search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளிக்கு  சரமாரி அரிவாள் வெட்டு - அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு
    X

    காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - அண்ணன், தம்பிக்கு வலைவீச்சு

    • காயல்பட்டினம் லட்சுமிபுரத்தில் அழகு லிங்கம் , வீரமணி ஆகிய இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
    • சில மாதங்களாக இவர்கள் இருவரும் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பலரிடமும் வீண் பிரச்சினைகள் செய்து வந்துள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    வசித்து வருபவர் முத்துகிருஷ்ணன் (வயது 49).

    கட்டிட தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதே பகுதியில் கூட்டாம்புளியை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவரின் மகன்களான அழகு லிங்கம் (29), வீரமணி (23) ஆகிய இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

    சில மாதங்களாக இவர்கள் இருவரும் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள பலரிடமும் வீண் பிரச்சினைகள் செய்து வந்துள்ளனர்.

    இதன் காரணமாக அழகுலிங்கம், வீரமணி ஆகியோர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கத்து வீட்டுக்காரரான முத்துகிருஷ்ணனிடமும் அந்த இரு நபர்களும் தகராறு செய்துள்ளனர். முத்துகிருஷ்ணனின் மகன்கள் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு முத்துகிருஷ்ணன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அண்ணன், தம்பிகளான அழகு லிங்கமும், வீரமணியும் அரிவாளுடன் வந்து முத்துகிருஷ்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர். உடல் முழுவதும் 11 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில் முத்துகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டனர். அப்போது அழகுலிங்கமும், வீரமணி யும் அங்கிருந்து ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் உடனடியாக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து லட்சுமிபுரத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முத்துகிருஷ்ணன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் ஆகியோர் அழகுலிங்கம், வீரமணி இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×