என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல்லில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்5 July 2022 12:36 PM IST
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இதில் பலர் கலந்து கொண்டு கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் பதிவில் உள்ள குறைகளை சரிசெய்யவேண்டும். ரூ.3000 பென்சன் வழங்கவேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், திருமணநிதி ரூ.50ஆயிரம் வழங்கவேண்டும். திண்டுக்கல் மாவட்ட நலவாரிய அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை பூர்த்திசெய்யவேண்டும்.
மாவட்ட கண்காணிப்புகுழுவை உடனடியாக அமைத்து மாதம் ஒருமுறை கூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் முருகேசன், தீத்தான், புஷ்பம், பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×