search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்  - கலெக்டர் அலுவலகத்தில் மனு
    X

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மனு கொடுத்தவர்கள்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

    • சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிருப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.
    • எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஓைட கட்டும் பணி

    பாளை தாலுகா சிவந்தி பட்டி அம்பேத்கர் தெரு பொதுமக்கள் ஊர் தலைவர் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவந்திபட்டி கிராமம் அம்பேத்கர் தெரு ஆதி திராவிடர் பறையர் குடியிரு ப்பில் மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் செல்ல ஓடை கட்டப்படும் பணியை சிலர் தடுக்கின்றனர்.

    சமீபத்தில் இங்கு ஓடை கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு சுமார் 200 அடி நீளம் கட்டப்பட்டுள்ளது. அந்த பணியும் தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது.

    இதனால் எங்களது குடியிருப்பில் இருந்து வெளி யேறும் மழை நீர், கழிவு நீர் உள்ளிட்டவை வெளியேறு வதற்கு வழி இல்லாமல் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் இருந்து வருகிறது. எனவே பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் ஓடையை முழுமை யாக கட்டி தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    குவாரி உரிமம்

    சங்கர் நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட தாதனூத்து 2-வது வார்டு பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாதனூத்து கிராமத்தில் 350- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குவாரி உரிமம் பெற்ற ஒருவர் அரசு விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக வெடிமருந்து பயன்படுத்தி அதிக ஒலி சத்தத்துடன் வெடி போடுகின்றனர்.

    தாதனூத்து ஊரின் விவசாய நிலம் அருகே 500 மீட்டர் தொலைவில் புதிதாக ஒரு குவாரி உரிமம் பெற்று செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. எனவே அதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கிராமத்தை சுற்றி 3 கிலோமீட்டர் அளவுக்கு புதிதாக எந்த குவாரிக்கும் உரிமம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

    தீபாவளி போனஸ்

    தமிழ்நாடு எச்.எம்.எஸ். கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் பேர வை மாவட்ட நல வாரிய கண்காணிப்பு குழு உறுப்பினர் பாக்கி யம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எச்.எம்.எஸ். கட்டு மானம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு தனி தனி வாரியமாக 18 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் தொழிலாளர்கள் பதிவு செய்திட தொடங்கி தற்போது 40 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு தீபாவளி போனசாக ரூ.7000 வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கு எளிய முறையில் மானியம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு அளித்தனர்.

    தாசில்தார் மீது புகார்

    மாவீரன் சுந்தர லிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மானூர் வட்டம், மானூர் யூனியன் ஆகியவற்றின் அலுவலகத்தின் கட்டி டங்கள் எல்லாம் மானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து வருகிறது. மானூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 43 ஊராட்சிகளும், 80-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.

    இங்கு வசிக்கும் மக்கள் அரசின் சலுகைகள் உட்பட அனைத்தையும் பெறுவதற்கு மானூர் ஊராட்சி பகுதிக்கு தான் வரவேண்டிய நிலை இருக்கிறது.மானூரில் பொது கட்டிடங்கள் அமைக்க இடம் கேட்கும் போது யூனியன் அதிகாரிகள் இங்கு பொதுவான இடம் இல்லை என்று கூறி சான்று வழங்கி வருகின்றனர். இதனால் இப்பகுதிக்கு கோரிக்கையை ஏற்று அறிவிக்கப்பட்ட தீயணைப்பு நிலையம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்டவை கட்ட முடியாத நிலை இருக்கிறது.

    எனவே இது தொடர்பாக பட்டா குறைதீர்க்கும் முகாமில் சிலுவை முத்து என்பவர் கேள்வி எழுப்பிய போது மானூர் தாசில்தார் முருகன் அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே யூனியன் அதிகாரிகள் மீதும் தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    காங்கிரஸ் மனு

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட தேசிய தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை தாலுகா மணிமுத்தாறு பேரூராட்சி க்குட்பட்ட மணிமுத்தாறு அருவியின் மேல் தலையணை யிலிருந்து மாஞ்சோலை, நாலு முக்கு, ஊத்து வரை தார் சாலை மிகவும் மோசமாகவும், பயணிப்பவருக்கு ஆபத்தான நிலையிலும் உள்ளது.

    பேரூராட்சியின் எஸ்டேட் பகுதியில் 5 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 2000 தோட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்த சாலை மோசமாக இருப்பதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    நெல்லை மாவட்ட இளைஞர் மற்றும் பெண்க ளுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்க ப்பட்ட கங்கை கொண்டான் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலங்களை நல்ல முறையில் செயல்படுத்தி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் மத்திய மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    Next Story
    ×