என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே நாளில் மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது.
- மேலும் சிகிச்சை ஒரே நாளில் 28 பேருக்கு பாதிப்பு.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று மேலும் 28 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 116 பேரில் 13 பேர் குணமாகினர். தற்போது 131 பேர் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த மே மாதம் வரை கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் படிப்படியாக கொரேனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
தற்போது சேலத்தில் தொற்று அதிகரித்து வருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவும், பரிசோதனையை அதிகரிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பள்ளிகளில் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.