என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
Byமாலை மலர்31 Aug 2023 3:00 PM IST
- திருவாரூர் ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் பருத்தி ஏலம் நடை பெற்றது.
- ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.7,059க்கு ஏலம் போனது.
திருவாரூர்:
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர்.
இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
அதுசமயம் விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.
இதில் அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 59 -க்கு ஏலம் போனது.
குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 209 விலையும் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 612-க்கு விற்பனையானது.
Next Story
×