search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த வாரத்தை விட குறைவாக விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்
    X

    கடந்த வாரத்தை விட குறைவாக விற்பனைக்கு வந்த பருத்தி மூட்டைகள்

    • விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.
    • கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பி பாளையம், பச்சம் பாளையம், கள்ளிமடை, குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெறும்.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கி சென்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 8 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரம் வரை மூட்டைகள் பருத்தி வரத்து இருந்தது. இந்த வாரம் 5 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×