search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    யூனியன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

    • வடமதுரை யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
    • அனுமதியின்றி மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    வடமதுரை:

    வடமதுரை யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவர் தனலட்சுமி பழனிச்சாமி தலைமை வகித்தார்.

    துணைத்த–லைவர் தனலட்சுமி கண்ணன், வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிங்கார கோட்டை கவுன்சிலர் மோகன் பேசுகையில்,

    வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 144 குளங்கள் உள்ளன. அரசு அனுமதியின்றி மணல், மண் அள்ளுவதால் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கோர்ட்டு உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதுமட்டுமன்றி 15 ஊராட்சிகளிலும் ஊராட்சி அனுமதியின்றி மண், மணல் அள்ளக் கூடாது எனவும் தெரி–வித்தார்.

    கவுன்சிலர்களை ஊராட்சிகளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்காதது வேதனை அளிப்ப–தாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். மேலும் ஊராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும்போது அதைவிட குறைவான ஊதியம் அவர்கள் பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

    முக்கிய தீர்மானமாக வடமதுரை ஒன்றிய ஊராட்சிகளின் தாலுக்கா தலைமை இடமான வேடசந்தூர் சென்றுவர பொதுமக்கள் அவதியுறு–கின்றனர். இதனால் வடமதுரையில் தாலுகா அலுவலகம் அமைத்து பொது மக்களின் சிரமங்களைக் குறைக்க வேண்டும் என்றும், வட மதுரையை தலைமை–யிடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாலட்சுமி முடிவில் நன்றி கூறினார்.

    Next Story
    ×