search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்-கவுன்சிலர்கள் கோரிக்கை
    X

    குன்னூரில் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-கவுன்சிலர்கள் கோரிக்கை

    • கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.
    • பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் நகரமன்ற மாதாந்திர கூட்டம் தலைவர் ஷீலாகேத்ரின் தலைமையில் நடந்தது.

    நகராட்சி கமிஷனர் ஏகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் வாசிம்ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசார விவாதம் செய்தனர்.

    வாசிம்ராஜா:

    உழவர் சந்தை பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை சீரமைக்கும் பணி, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு நீண்ட நாட்களாக பணிகள் முடியவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு உள்ள காலியிடத்தில் சிறப்பு நிதிஒதுக்கீடு செய்து, சமுதாயக் கூடமோ, உள்விளையாட்டு அரங்கமோ கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஜாகிர்உசேன் (தி.மு.க):

    குன்னூர் நகராட்சியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். அங்கு பணியாற்றும் ஒருசிலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்து உள்ளது. அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சுசீலா: நகரப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும் தெருநாய் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமசாமி: எனது வாடில் இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகளை கண்டித்து வரும் நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.

    முன்னாள் நகராட்சி கமிஷனர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு சீல் வைத்து உள்ளார். ஆனால் இந்தக் கட்டிடங்கள் அனுமதி இன்றி திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தவர் யார்?

    நகராட்சி கமிஷனர்:

    அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடங்களை யார் திறந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குன்னூர் மாநகராசி கூட்டத்தில் விவாதம் நடந்தது.

    Next Story
    ×