என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கவுண்டம்பாளையம்
- பள்ளிகள் தொடங்கும் முன்பு திறக்க வலியுறுத்தல்
- ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டப்பட்டது.
கோவை:
கோவையில் இருந்து ஊட்டி மைசூரு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. கோவை மாநகருக்குள் இருந்து துடியலூர். பெரியநாய க்கன்பா ளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை யாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளதால் இந்த சாலை எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
குறுகிய சாலை என்பதால் சாலையை விரிவுபடுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. 2018-ம் ஆண்டில் கவுண்டம்பாளையம் சந்திப்பு 1.2 ஹவுசிங் யூனிட்டில் இருந்து ராமசாமி கல்யாண மண்டபம் வரை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.
மொத்தம் ரூ.50 கோடி மதிப்பில் அமைக்க ப்பட்டுள்ள இந்த மேம்பா லத்தில் தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து சர்வீஸ் சாலைகள், பூச்சு வேலைகள் என அனைத்து வேலைகளும் முடிந்து கிட்டதட்ட 3 மாதங்களுக்கு மேல் ஆகின்றன.
ஆனால் இதுவரை இந்த பாலம் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த பாலத்தில் தினமும் காலை, மாலை வேலைகளில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்கள் கூறும்போது, இந்த பாலம் முடிவடைந்து கிட்டதட்ட 3 மாதங்கள் ஆகின்றன. ஆனால் தற்போது வரை திறக்கப்படவில்லை இனி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. மேலும் இந்த வழியாக வேலைக்கு செல்பவர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த மேம்பாலத்தை திறந்தால் அன்றாடம் செல்லும் பொதுமக்கள் மன உளைச்சல் இல்லாமல் செல்ல முடியும், இந்த பாலம் கட்டி பூசப்பட்ட பெயிண்டும் பல இடங்களில் போய்விட்டது. அதனையறிந்து உடனடியாக இந்த மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.