என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு மாடுகள் விற்பனை
- தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.
- நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.
பொள்ளாச்சி:
தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.
இந்த சந்தையானது வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் என 2 நாட்கள் நடக்கும். செவ்வாய்க்கிழமைகளில் மாடு விற்பனையும், வியாழக்கிழமை, ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.
இந்த சந்தையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வரும்.மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
கடந்த மாதம் சில மாதங்களாக சந்தை நாட்களில் ஒரு கோடி மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வந்தது.தற்போது வருகிற 10-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நேற்று பொள்ளாச்சி மாட்டு சந்தை களை கட்டி இருந்தது.
வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர்.இதனால் காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது. மழை பெய்து கொண்டு இருந்தாலும் விற்பனை விறு, விறுப்பாக நடைபெற்றது.
நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக நாட்டு காளை ஒன்று ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.இதுகுறித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் செல்வராஜ் கூறியதாவது:-பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 3,500 மாடுகள் கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறு, விறுப்பான நடைபெற்றது.
நாட்டு காளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்பனையானது.
நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், முராரக எருமை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், ஜெர்சி ரக பசு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், ஜெர்சி எச்.எப் ரக பசு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் விற்பனையானது. நேற்று மொத்தமாக ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்