search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி
    X

    மத்தூர் அருகே உள்ள மேக்கலாம்பட்டியில் பயிர் விளைச்சல் போட்டியில் வேளாண்மை துணை இயக்குநர் மனோகரன் தலைமையில் கதிரி லெபாக்சி 1812- ரக நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.

    விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி

    • வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
    • திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வேளாண்மை விரி வாக்க மைய அலுவலகம் சார்பில் மேக்கலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயி தம்பிதுரை வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.

    வேளாண்மைத் துறை சார்பில் நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு வயல் தேர்வு செய்யபட்டு மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பரிசு வழங்கப்படுகிறது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்மனோகரன் நடுவராக தலைமை தாங்கியும் வேளாண்மை உதவி இயக்குநர்முருகன் முன்னிலையிலும், கலெக்டரின் உதவியாளரும், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ் உள்ளடக்கிய குழு மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சிவநதி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், பயிர் காப்பீடு திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.

    Next Story
    ×