என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 641.10 மி.மீ. மழை அளவு பதிவு
- டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
- நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும், சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது.
கடலூர்:
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. மேலும் டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது . புயலாக மாறும் பட்சத்தில் புயலுக்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விடிய விடிய மழை பெய்து வந்தது. இதில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம், வேப்பூர், சேத்தியாத்தோப்பு, வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலை நகர், காட்டு மயிலூர், தொழுதூர், வடக்குத்து உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்தது.
இந்த மழை நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும், சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போது குறைந்த அளவில் தண்ணீர் தேங்கி வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழும் பகுதியும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடனும், அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயிலும் இதற்கிடையில் கனமழையும் அதிகாலையில் பணிபொழிவும் மாலையில் குளிர்ந்த காற்று என தொடர்ந்து சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-
காட்டுமன்னார்கோயில் - 78.2, லால்பேட்டை - 55.0,அண்ணாமலைநகர் - 45.0,கடலூர் - 38.4, கொத்தவாச்சேரி - 38.0, ஸ்ரீமுஷ்ணம் - 33.2,சிதம்பரம் - 30.2,கலெக்டர் அலுவலகம் - 27.9, பரங்கிப்பேட்டை - 25.2, புவனகிரி - 25.0, பெல்லாந்துறை - 24.2, குறிஞ்சிப்பாடி - 24.0, வானமாதேவி - 21.8, சேத்தியாத்தோப்பு - 21.6, குப்பநத்தம் - 20.0, கீழ்செருவாய் - 18, பண்ருட்டி - 18.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 17.5, வேப்பூர் - 17.0, விருத்தாசலம் - 16.5, தொழுதூர் - 15.0, காட்டுமயிலூர் - 13.0, லக்கூர் - 7.4, வடக்குத்து - 6.0, மீ-மாத்தூர் - 5.0,என மொத்தம் - 641.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்