search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • தமிழக அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது.
    • மீதமுள்ள 18 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் அளவுக்கு அதிகமான பணியாளர்களை நியமனம் செய்ததாலும், போதுமான நிதி இல்லாததாலும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத இக்கட்டான சூழ்நிலை நிலவியது. இதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் பல கட்ட போராட்டங்களில் இறங்கினர். இதையடுத்து, தமிழக அரசே இப்பல்கலைக்கழகத்தை ஏற்க முடிவு செய்தது. அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த 2013-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

    அதன்பிறகு தமிழக அரசே அண்ணாமலை பல்கலைக்கழகத்தை ஏற்று நடத்தி வருகிறது. மேலும் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட உதவி பேராசிாியர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தபோது, அதில் 56 உதவி பேராசிரியர்கள் உரிய கல்வித்தகுதி மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    அதாவது, உதவி பேராசிரியர்கள், அவர்கள் நியமனத்தின்போது குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்கவில்லை. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இருப்பினும் தகுதியற்ற உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படாமல், அதில் 38 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு பணி நிரவல் மூலம் மீண்டும் பணி அமர்த்தப்பட்டனர். மீதமுள்ள 18 பேர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில், திடீரென 56 உதவி பேராசிரியர்களையும் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு மற்றும் தமிழக அரசு உயர் கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி பணி நீக்கம் செய்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட 56 உதவி பேராசிரியர்களும் உரிய கல்வி படிக்காமலும், உதவி பேராசிரியருக்கான போதுமான கல்வி தகுதி இல்லாமலும் பணியில் சேர்ந்தது கண்டறியப்பட்டது.

    இவர்கள் மீது ஆட்சி மன்றக் குழு முடிவின்படியும், தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின்படியும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் தீபாவளி பண்டிகை முடிந்து பட்டாம்பாக்கத் திலிருந்து சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரது லேப்டாப் பேக் தவறி விழுந்து விட்டது. அதில் ஒரு லட்சம் மதிப்பிலான லேப்டாப் மற்றும் வீடியோ கேமரா இருந்தது.

    பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் அந்த சாலையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.அதன்படி சாலையோரம் கிடந்த லேப்டாப் பேகை போலீசார் கண்டறிந்தனர். அதனை என்ஜீனியர் பாலாஜியிடம் பண்ருட்டி போலீசார் ஓப்படைத்தனர்.

    வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 26). இவருக்கும் நத்தப்பட்டு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.நட்பாக பழகிய இவர்கள், நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது அந்த வாலிபர், வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.இதை நம்பிய வினோத்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறினார். மேலும் தனது பெயரையும், காதலன் விருப்பத்திற்கு ஏற்ப வினோதினி என மாற்றிக் கொண்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பாலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த வாலிபர், வினோதினியுடன் குடும்பம் நடத்த மறுத்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மேலும் வாலிபரின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதுபற்றி அறிந்த வினோதினி, அந்த வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, பாலூர் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் இருதரப்பினரையும் கடந்த மாதம் 3-ந் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன் பேரில் வினோதினி, ஊர் பஞ்சாயத்துக்கு புறப்பட்ட போது அந்த வாலிபரின் உறவினர்கள் அவரை தடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றார். இதுதொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் வினோதினியின் புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.இதனால் பாதிக்கப்பட்ட வினோதினி, கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இது பற்றி அறிந்த புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட பல்வேறு பகுதி களில் மழைநீர் அகற்றும் பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாநகராட்சிக் குட்பட்ட கார்த்திகேயன் நகர் பகுதியில் மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், வில்வநகர் பகுதியில் உள்ள பெருமாள் குளத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும், அதனருகே மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து அமைக்கப்பட்டி ருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாற்றின் நீர்வரத்தை பார்வையிட்டு, அதனருகே நெடுஞ்சாலை துறை மற்றும் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த விளக்க புகைப்படங்க ளையும் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில பொது மக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வருவாய் த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப் புத்துறை, காவல்துறை, நீர்வளத்துறை மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்க ளிடம் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கனமழை எற்படும் போது அதனை பொதுமக்களுக்கு எவ்வித பதிப்புக்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் அளவிற்கு அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ சேகரன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரண்யா , மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளிச் செல்வதாக ராமநத்தம் போலீசாருக்கு புகார் வந்தது.

    இதையடுத்து ராம நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் பெண்ணங்கோனம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கொளஞ்சிவேல் (வயது 50) என்பவரையும், அவரது மாட்டு வண்டியையும் மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை கன மழை பெய்தது. இன்று பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கலெக்டர்அலுவலகம் -66.4, புவனகிரி-64.0, வடகுத்து- 57.0, அண்ணா மலைநகர் - 53.4, சிதம்பரம் -52.4, குறிஞ்சிப்பாடி-52.0, லால்பேட்டை-49.4, கொத்தவாச்சேரி-48.0, வானமாதேவி-47.0, பரங்கிப்பேட்டை-46.7, கடலூர்-45.6, சேத்தியாதோப்பு-44.4, பண்ருட்டி-44.0, காட்டு மன்னார் கோவில் - 41.4, எஸ்ஆர்சி குடிதாங்கி-38.75, ஸ்ரீமுஷ்ணம்-28.2, விருத்தாசலம்-20.0, வேப்பூர்-15.0, பெல்லாந்துறை-14.6, தொழுதூர்-12.0, மீ-மாத்தூர் - 12.0, குப்பநத்தம்-11.8, காட்டுமயிலூர் - 10.0, கீழ்செருவாய் - 6.0, லக்கூர்- 3.0.கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 883.05 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார்.

    கடலூர்

    பண்ருட்டி அடுத்த விலங்கல் பட்டை சேர்ந்தவர் பற்குணன் (வயது 40), ஆட்டோ டிரைவர்,இவரது போனுக்கு நேற்று ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு டிரைவர் வேலைக்கு உனக்குஆர்டர் வந்துள்ளது.இந்த வேலையில் சேர 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நாளைக்கு காலை 10 மணிக்கு யூனியன் அலுவலகத்திற்கு பணத்துடன் வரவும் என்று கூறியுள் ளார் .

    போனில் பேசிய நபர் கூறியவாறு ஆட்டோ டிரைவர் பற்க்குணன் ரூ 50 ஆயிரம் பணத்துடன் பண்ருட்டி யூனியன் ஆபீசுக்கு நேற்று காலை வந்தார்.சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்த டிப் டாப் ஆசாமி பஸ்சிலிருந்து இறங்கி வந்துள்ளார். அவருக்காகயூனியன் அலுவலகம் வாசலிலே காத்திருந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் டிப்டாப் ஆசாமிடம் முதல் தவணையாக ரூ50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டிப் டாப் ஆசாமி இங்கேயே இரு. உனக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு ஜெயசீலன் என்பவர் வருவார் எனக்கூறி அங்கிருந்து பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பற்க்குணன் வேலைக்கான ஆர்டர் வரும் என்று நம்பி அங்கேயே காத்திருந்திருந்தார். நேரமாக, நேரமாக டிப்டாப் சாமி சொன்னது போலயாரும்வரவில்லை நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து டிப்டாப் ஆசாமிக்கு போன் செய்துள்ளார்.

    டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பற்குணன் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடலூர், பண்ருட்டி ,நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, காட்டு மன்னார்கோவில் ,திட்டக்குடி மற்றும் மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்தது.இந்த மழையானது நேற்று மதியம் வரை இருந்த நிலையில் மீண்டும் இரவு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற பகுதிகளில் தயார் நிலையில் இருந்ததோடு மழை நீர் வடிவதற்காகவும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடலூர்தென் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு சாத்தனூர் அணையில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறந்த காரணத்தினால் கண்டரக்கோட்டை, மேல்பட் டாம்பாக்கம் வழியாக கடலூர் தென்பெண்ணையாற்றில் நீர் பெருக்கு அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கொமந்தாமேடு, மருதாடு தரைப்பாலத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் இன்று காலை வரை விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 2 அணைக்கட்டு மற்றும் 4 தடுப்பணைகள் நிரம்பி கடலூர் கொமந்தாமேடு வழியாக 2500 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 950 கன அடி தண்ணீர் வெளியேற்றும் நிலையில் இந்த தண்ணீர் கடலூர் மாவட்டத்திற்கு வராது

     அதற்கு மாறாக கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வந்த காரணத்தினால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. தற்போது மழை அளவு குறைந்த காரணத்தினால் தென்பெண்ணை ஆற்றில் படிப்படியாக தண்ணீர் ஓடுவது கணிசமாக குறையும். இது மட்டும் இன்றி கெடிலம் ஆற்றில் தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் சென்று வருகிறது.கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு , கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது. 2 நாட்கள் பெய்த கன மழை காரணமாக தென்பெண்ணையாற்றில் 2500 கன அடி தண்ணீர் வினாடிக்கு சென்று வரும் நிலையில் கடலில் வீணாக கலந்து வருவதால் இதனை தடுத்து விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் உயர்வதற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

    2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    கடலூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச்சேர்ந்தவர்கள் சங்கர், தென்றல் மாரியப்பன், அப்பணசாமி, கருப்பசாமி, சங்கர், தங்கராஜ், ஆறுமுகம், அஜய்குமார். சுமை துாக்கும் தொழி லாளியான இவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிரபக்தர்கள். இவர்கள் ஆண்டுதோறும் 21 நாட்கள் விரதமிருந்து, சைக்கிளிலேயே பயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு விரதமிருந்து மாலை அணிந்து 8 பேர், கடந்த 11-ந் தேதி ஓடப்பட்டி பிள்ளையார்கோவிலில் இருந்து சைக்கிள் யாத்திரையை புறப்பட்டனர். 3-ம் நாளான நேற்று ராமநத்தம் வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். இதுகுறித்து சைக்கிள் யாத்திரை குழுவின் தலைவர் சங்கர் கூறும் போது, 2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    • விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர்.
    • காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோபாலபுரத்தில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு சொந்தமான வேன், இன்று காலை கோ.மாவிடந்தல் கிராமத்தில் இருந்து 6 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டது.

    இந்த வேன் கோ.மாவிடந்தலில் இருந்து மிகவும் குறுகலான சாலையில் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக சாலை ஓரத்தில் பள்ளி வேனை டிரைவர் நிறுத்தினார்.

    விளை நிலங்களுக்கு செல்லும் குறுகலான சாலையில் பள்ளி வேன் நின்றபோது, தொடர் மழையினால் ஈரப்பதத்துடன் இருந்த சாலையோர மண் சரிந்தது. இதில் வேன் மெல்ல மெல்ல சாய்ந்து விளைநிலத்தில் பக்கவாட்டில் கவிழ்ந்தது.

    இதனை சற்றும் எதிர்பாராத பள்ளி மாணவர்கள் அலறினர். அவ்வழியே சென்றவர்கள், விளை நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு வேன் அருகில் வந்தனர். அதில் இருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் டிரைவரை மீட்டனர். சாலையோரம் நிறுத்தப்பட்ட பள்ளி வேன் கவிழ்ந்ததால் சிறு காயங்களுடன் மாணவர்களும், டிரைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இத்தகவல் அறிந்த கோ.மாவிடந்தல் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். மிகவும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலை அகலப்படுத்தப்பட்டிருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று குற்றஞ்சாட்டினர்.

    மேலும், விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், கம்மாபுரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவ்வழியே அரசு காரில் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் வந்து கொண்டிருந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரினை முற்றுகையிட்டனர். காரில் இருந்து இறங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரிடம் சாலையை அகலப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். சாலையோரம் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்க முன்வந்தால் சாலை அகலப்படுத்தப்படுமென அவர் கூறினார்.

    தொடர்ந்து மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் கோ.மாவிடந்தல் கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலரும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    • கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.

    டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    ஈரோடு மற்றும் கீழணைக்கு மேல் பகுதியில் சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் நேற்று முதல் கீழணைக்கு வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் 9 அடி உள்ள கீழணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் காட்டாறு மற்றும் செங்கால் ஓடை வழியாக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது.

    மேலும் வீராணம் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6 மணி வரை 8 செ.மீ மழை பெய்துள்ளது.

    மேலும் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை 4.8 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம்44.25 அடியாக உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்னும் 3 அடி தண்ணீரை அனுப்பி தேக்கி வைத்தால் மழை பெய்யாவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சமாளித்து விடலாம் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×