search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.
    • மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கிழக்கு ராமாபுரம் உள்ளது. இந்த பகுதியில் சாலை குண்டு குழியுமாக உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடலூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் குண்டு குழியுமான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்த நிலையில், இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் திடீரென்று குட்டை போல் நின்றிருந்த மழை நீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

    மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்கா விட்டால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர் . பின்னர் சிறிது நேரத்தில் சிறைபிடித்த அரசு பஸ்ைசை விடுவித்து நாற்று நடும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

    • திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள்.
    • குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம் நோக்கி தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அடுத்த நத்தப்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று ஒரு கும்பல் சரமாரியாக பஸ்சை நோக்கி கற்களை வீசினார்கள். இதில்பின்பக்கம் கண்ணாடி முழுவதும் பலத்த சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது.

    அப்போது பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறி கத்தி துடித்தனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திய நிலையில், பொதுமக்கள் மர்ம கும்பலை பிடிக்க ஓடினார்கள் . அப்போது குடிபோதையில் இருந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினார்கள். இதனை தொடர்ந்து தனியார் பஸ் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பூரில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசிப்பவர் பாஸ்கர். தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் கடந்த 7-ந் தேதி ஐந்தே முக்கால் பவுன், ரூ.18 ஆயிரம் திருட்டு போனது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேப்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல் அளித்ததால், போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரை சேர்ந்த வாஞ்சிநாதன் (வயது 27), என்பதும், கவுன்சிலரின் மகன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.
    • ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் மணி (வயது 33). இவர் மினி லாரியில் குடிநீர் வழங்கி வருகிறார். இவரும் அதே ஊரை சேர்ந்த பாண்டியனும் நேற்று மாலை மினி லாரியில் திருவதிகை மண்டப தெரு பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் வழங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த திருவதிகையை சேர்ந்த சந்தோஷ் (25), தான் மிகப் பெரிய ரவுடி என்றும், உங்களிடம் உள்ள பணத்தை கொடு என்று கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது பணத்தை கொடுக்க மறுத்த மணியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். அவரிடமிருந்து லாவகமாக தப்பிய மணி, இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சந்தோஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜனா என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கடலூர் ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த தண்டுபாளையம் காலனியை சேர்ந்த ஜனா (வயது 25) என்பவர், தனக்கு சோடா சிகரெட் வேண்டுமென்று கேட்டுள்ளார். காசு கொடுத்தால் தருவேன் என பிரவீன் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஜனா, சோடா பாட்டிலை எடுத்து பிரவீனின் தலையில் அடித்து பொருட்கள் தரவில்லை என்றால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசில் பிரவீன் கொடுத்த புகாரின் போரில் பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்த னர்.
    • பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நத்தம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் நாரா யணன் மகன் சுனில்ராஜ் (வயது 16). இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி யில் படித்து வருகிறார். கடந்த 3-ந் தேதி பள்ளி யில் விளையாடும் போது அதே பள்ளியில் படிக்கும் நவீன்குமார் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இரு வரையும் அங்குள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை ராமபுரம் பஸ் நிறுத்தத்தில் 2 மாணவர்க ளும், சக மாணவர்களுடன் சேர்ந்து 2 கோஷ்டிகளாக பிரிந்து தாக்கி கொண்ட னர். அப்போதும் அங்கி ருந்த வர்கள் மாணவர் களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி வைத்த னர்.

    பள்ளி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும்போது நவீன்குமாரின் நண்பர் களான சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வரன் ஆகியோர், சக மாணவர்க ளான சுனில்ராஜ், ஜெயசந்தி ரன், ரவிசந்திரன், மோகேஷ் ஆகிய 4 பேரை தாக்கினர். இதில் காயமடைந்த 4 பேரும் பண்ருட்டி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீ சார் சிரஞ்சிவி, ராகுல், தேவா, லோகேஷ்வ ரன், யோகேஷ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களி டையே அடிக்கடி மோதல் வருவது குறிப்பிடத்தக்க தாகும்.

    • இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூரில் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
    • மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

    கடலூர்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடை களில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூரில் உள்ள சாலை யோரம் தள்ளுவண்டி கடை களை வைத்து துணி வியா பாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக் குப்பம் நேதாஜி சாலை களில் மாலை வேளை யில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் வியா பாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும் முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடை பெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம் உத்தரவின் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகரில் கடலூர் மஞ்சக் குப்பம், திருப்பாதிரிப்புலியூர் சிக்னல், நாகம்மன் கோவில் உள்ளிட்ட 4 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் போலீசார் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
    • 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தி யாத்தோப்பு மழவராய நத்தத்தை சேர்ந்தவர் பச்ச முத்து (வயது 50). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் கணக்கிட்டு ஆய்வாளராக பணி செய்தார். இவர் நேற்று மாலை 3 மணியளவில் பாளையங் கோட்டை மின் நிலையம் அருகேயுள்ள சாலையோரம் நின்று கொண்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பச்ச முத்து மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பச்சமுத்துவின் தலையில் பலத்த காய மடைந்து ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தார். அவரை மீட்டு 108 ஆம்பு லன்ஸ் மூலம் காட்டு மன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.
    • அய்யனார் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்தி புரம் பகுதியிலிருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கி ருந்து கடலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தரமாக உள்ளதா? என்பதனை மருத்துவ குழு அவ்வப்போது ஆய்வு செய்து, முடிவுகளை மாநகராட்சிக்கு தெரிவிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று காலை 4 பேர் கொண்ட மருத்துவ குழு திருவந்திபுரம் மலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா? குளோரின் சரியான முறையில் கலக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்.

    அப்போது அவ்வழியாக சென்ற ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், மருத்துவ குழுவினரிடம் சென்று இந்த ஊராட்சி பகுதியில் சரியான சாலை வசதி இல்லை. எங்கள் பகுதியில் குடிநீர் கலங்கலாக வருகின்றது. இது தொடர்பாக நீங்கள் ஏன் ஆய்வு செய்ய வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர்கள் வந்த வாகனத்தை வழி மறைத்து தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து காரசாரமாக பேசினார். சிறிது நேரம் பேசிவிட்டு ஒன்றியகுழு துணைத் தலைவர் அய்யனார் அங்கி ருந்து சென்றுவிட்டார். இதையடுத்து மருத்துவக் குழு வினர் தங்களின் பணிகளை நிறைவு செய்து அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செய்து செல்வர். மேலும், தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சிதம்பரம் நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு வந்து செல்வது வழக்கம். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் பராமறிக்கப்படும் இந்த சுற்றுலா மையத்தில் அரசின் தங்கும் விடுதியும், தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளது. இந்த விடுதிகள் அனைத்து விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நிரம்பி வழியும்.

    சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு அறையில் கைத்துப்பாக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைக் கண்டு பதறிப்போன ஊழியர்கள், அந்த அறையை விடடு தலைதெரிக்க ஓடிவந்தனர். இதனால் மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், பதட்டமடைந்து சுற்றுலா கழக விடுதியை விட்டு வெளியில் வந்தனர். பின்னர் தகவலறிந்து தங்களின் அறைக்கு திரும்பி சென்றனர் இது குறித்து துப்புரவு பணியாளர்கள் சுற்றுலா கழக மேலாளர் பைசலிடம் தகவல் கூறினர். துப்புரவு ஊழியர்களுடன் தங்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த கைத்துப்பாக்கி ஏர்கண் என்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிற்கு தகவல் கொடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து கிள்ளை போலீசார் பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா கழக தங்கும் விடுதிக்கு விரைந்து சென்ற னர். அங்கிருந்த அறையில் கிடந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றினர். மேலும், கடந்த 2 தினங்களாக இங்கு தங்கியிருந்தவர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பிச்சாவரம் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேகப்படு ம்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் சங்கராபுரம் பொய் குணம் ரோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (வயது 30) மற்றும் சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு (23) என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 130 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×