என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயத்தாறில் தினமும் அவதி: நெல்லை பஸ்களில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் - கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
- கயத்தாறில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பணி நிமித்தமாக தினமும் ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர்
- காலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை 2 பஸ்களே கயத்தாறு பகுதிக்கு சென்றுள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் இருந்து நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களுக்கு பணி நிமித்தமாகவும், தொழில் விஷயமாகவும் தினமும் ஏராளமானோர் பஸ்களில் வந்து செல்கின்றனர்.
மாணவர்கள் சிரமம்
மேலும் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கயத்தாறை சேர்ந்த சுமார் 462 மாணவ-மாணவிகளும், கோவில்பட்டி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரிகளில் சுமார் 263 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை நேரத்தில் கயத்தாறு பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
காலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ்களில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதாகவும், அவ்வாறு செல்லும்போது சிலர் சாலைகளில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை இருப்பதாவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
கூடுதல் பஸ்கள்
இன்று காலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் வரை 2 பஸ்களே கயத்தாறு பகுதிக்கு சென்றுள்ளது. அதில் கூட்டமாக மாணவர்கள் ஏறியதால் பஸ் கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் பஸ்களில் இருந்து இறங்கி வீடு திரும்பி விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்த னர். பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், காலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.