என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாணார்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் சேதமடைந்த மின் கம்பங்கள்
Byமாலை மலர்17 Sept 2022 1:01 PM IST
- மின்கம்பங்கள் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
- புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2 மற்றும் 4வது வார்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு 2 மற்றும் 4 வது வார்டில் 2 மின் கம்பங்கள்அதன் அடிப்பாகம் சேதமடைந்து காரைகள் பெயர்ந்து, எந்த நேரமும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே மின் கம்பம் உடைந்து ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் புதிய மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×