search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமியாருடன் தகராறால்  மருமகள் தூக்கு போட்டு தற்கொலை: வேப்பூர் போலீசார் விசாரணை
    X

    மாமியாருடன் தகராறால் மருமகள் தூக்கு போட்டு தற்கொலை: வேப்பூர் போலீசார் விசாரணை

    • மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
    • பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் கோவிந்தராஜ்,(வயது24) . இவருக்கும் மங்கலம் பேட்டை பேரூராட்சியை சேர்ந்த சுபாஷ் மகள் அனுஷாவுக்கும் (19) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓரு வருடம் ஆகாத நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையிலும் மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மாமியாரும் மருமகளும் தனித்தனியே சமைத்து சாப்பிட்டு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டின் அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, மாமியார் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதால் தான் முதலில் தண்ணீர் பிடித்து கொண்டு செல்கிறேன் என கூறிய போது மாமியார்- மருமகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமானஅனுசா தனது வீட்டில் வெளிக்கதவு மற்றும் உன் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார். குளிக்க சென்ற கணவன் கோவிந்தராஜ் தகவல் கேட்டு ஓடி வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று அனுசாவை தூக்கிலிருந்து மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசா உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. காவியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.அனுசாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடியாத நிலை உள்ளதால் கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரை செய்துள்ளார்.

    Next Story
    ×