search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

    • முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    • 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதான தொழிலாகும்.

    இந்த கிராமத்தில் 210-க்கும் மேற்பட்ட பைபர், நாட்டு படகுகள் உள்ளது.

    கடற்கரையில் இருந்து கீழத்தோட்டம் கிராமத்திற்குள் படகுகள் வந்து செல்வதற்கான ஒரே வழி இந்த முக துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டும் தான்.இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசின் உத்தரவின் பெயரில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மூலம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முக துவாரங்களை அடைத்து கிடக்கும் மணல்களை தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

    இந்த பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், அந்த முக துவார மணல் திட்டுகளை முறையாக தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை ஊர் பஞ்சாயத்தா ர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் திடீரென இன்று கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த பிரச்சினைக்கு மீன்வளத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடை பெறும் என்று கூறி அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×