என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை.
- நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 39வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் காலைச் சிற்றுண்டியை அமைப்பாளர்களே வழங்கக்கோரி தமிழக முதல்- அமைச்சரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதற்கு ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா, கொடி ஏற்றி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.பெருந்திரள் முறையீட்டில், காலைச் சிற்றுண்டி தொடர்பாக உணவுப் பொருட்களின் இருப்பு அறை சாவியை மற்றவர்களிடம் கொடுக்கச் சொல்வதால், உணவுப் பொருட்களின் இருப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. இதனால் காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் நமது மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை என்பதை தமிழக முதல் அமைச்சருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பெருந்திரள் முறையீடு நடந்தது வருகிறது. எனவே காலைச் சிற்றுண்டியை தயார் செய்யும் பணியையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.