search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    வாழப்பாடியில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

    • வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழப்பாடி வட்டத் தலை வர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக் வரவேற்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வட்டாட்சியர்களுக்கு துணை ஆட்சியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி துணை வட்டாட்சியர் பதவியிறக்கத்தை ரத்து செய்து பதவி உயர்வை வழங்க ஆணை வெளியிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலி பணியி டங்களை நிரப்ப வேண்டும். இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர்களின் பதவி பெயர் மாற்ற அர சாணை வழங்க வேண்டும். 2022 ஆகஸ்ட்டில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷமிட்டனர். துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×