search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்- வன்னியர் சங்கம் அறிவிப்பு
    X

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வன்னியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்காவிட்டால் ஆர்ப்பாட்டம்- வன்னியர் சங்கம் அறிவிப்பு

    • மணல் திட்டில் ஏறி மீன் பிடிக்க சென்ற நிலையில் எதிர்பாராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.
    • உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மதகுசாலை கிராமத்தை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த மாதம் 18-ம் தேதி இரவு, கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல் திட்டில் ஏறி, மீன் பிடிக்க சென்ற நிலையில்,எதிர்பா ராவிதமாக கரைபுரண்டு வந்த வெள்ளத்தில் நால்வரும் சிக்கிக்கொண்டனர்.

    இதில் கொளஞ்சிநாதன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற ஆகாஷ், மனோஜ் ,ராஜேஷ் ஆகிய 3 பேரும் பலியாகினர். இந்நிலையில், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா .அருள்மொழி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ம. க. ஸ்டாலின் மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க நிர்வாகிகளுடன் இணைந்து சம்மந்தப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது அவர்கள் கூறும்போது:- உயிரிழந்த மூன்று இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தகுதியான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். 15-ம் தேதிக்குள் இது குறித்து அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால், வன்னியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

    Next Story
    ×