search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு கடன் வழங்காத  தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம்: கரும்பு விவசாயிகள் அறிவிப்பு
    X

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது.

    விவசாயிகளுக்கு கடன் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம்: கரும்பு விவசாயிகள் அறிவிப்பு

    • விவசாயிகளுக்கு கடன் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டில் அருள் ஜோதி ராமலிங்கம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். மாநாட்டில் விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன் தொடங்கி வைத்து பேசினார். ஆலை மாவட்ட செயலாளர் தென்னரசு அறிக்கை வாசித்தார். மாவட்ட இணை செய லாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், கரும்பு சங்க மாநில செயலாளர் இரவிச் சந்திரன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ.ராம–லிங்கம், மாவட்ட பொரு–ளாளர் தட்சணாமூர்த்தி வாழ்த்துரை ஆற்றினார்கள். முடிவில் ராமானுஜம் நன்றி கூறினார். கூட்டத்தில் மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் விலை வழங்கிட வேண்டும். மாநில அரசு அறிவித்த எஸ்.ஏ.பி நிலுவைத் தொகை–யை உடனே வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் டன் 1-க்கு 100 ரூபாய் பிடித்தம் செய்த தொகையை உடனே விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

    கரும்பில் கழிவு பிடித்தம் செய்த ரூபாயை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம், அரசு, விவசாயி–கள் பங்கேற்கும் பழையபடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலை கழிப்பதை கண்டித்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு வருகிற 26-ஆம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயி–கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×