search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி யூனியனில் ரூ.1 கோடியே 90 லட்சத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் - சேர்மன் வசுமதி அம்பாசங்கர் அறிவிப்பு

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராமராஜ், துணைச் சேர்மன் ஆஸ்கர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் பேசும்போது, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அல்லிகுளம், குமாரகிரி, கூட்டுடன்காடு, வர்த்தகரெட்டிபட்டி, தளவாய்புரம், மாப்பிள்ளை யூரணி, மறவன்மடம், மற்றும்சேர்வைகாரன்மடம் ஆகிய ஊராட்சிகளில் தார்சாலைகள், பேவர்பிளாக் சாலைகள், வடிகால்கள், கழிவுநீர் கால்வாய், சிறு பாலம், தடுப்புச் சுவர்அமைத்தல் ஆகிய வளர்ச்சித் திட்ட பணிகள்ரூ.1 கோடியே 90 லட்சத்தில் மேற்கொள்ளப் பட இருப்பதாக தெரி வித்தார்.

    கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், யூனியன் கூட்ட அரங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகள் மே ம்படுத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

    முத்துக்குமார் உட்பட சில கவுன்சிலர் கோரிக்கைகள் முன்வைத்து பேசினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் பதிலளித்தார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், சுதர்சன் தொம்மைசேவியர், ஆனந்தி, முத்துமாலை, ஜெயகணபதி, மரியசெல்வி, முத்துலட்சுமி, செல்வபாரதி, நர்மதா, யூனியன் சத்துணவு அமைப்பாளர் செல்வராணி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×