search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே சிதிலமடைந்த பெருமாள் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வேண்டுகோள் கோவில் நிலங்களையும் மீட்க வலியுறுத்தல்
    X

    பழமையான பெருமாள் கோவில் மற்றும் அதன்முன்பு வளர்ந்துள்ள மரத்தை படத்தில் காணலாம்.

    திண்டுக்கல் அருகே சிதிலமடைந்த பெருமாள் கோவிலை புனரமைக்க பக்தர்கள் வேண்டுகோள் கோவில் நிலங்களையும் மீட்க வலியுறுத்தல்

    • எமக்கலாபுரத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த ஜமீன்தாரர்களால் கட்டப்ப ட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • பெருமாள் கோவிலையும் புனரமைத்து வழிபாடு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே எமக்கலாபுரத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த ஜமீன்தார ர்களால் இ க்கோவில் கட்டப்ப ட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    அதன்பிறகு இந்து சமயஅறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் கோவிலில் எந்தவித பணிகளும் செய்யப்படாததால் தனது தெய்வீக தன்ைமயை இழந்து பராமரிப்பின்றி காணப்படுவது இப்பகுதி மக்களை கண்ணீர் வடிய வைத்துள்ளது.

    சைவ, வைணவ வழிபாட்டை வலியுறுத்தும் வகையில் இக்கோவிலில் சிவலிங்கமும், பெருமாள் சிலையும் உள்ளன. மேலும் கன்னிமார் சிலைகளும் உள்ளன. வேறு சிலைகள் எதுவும் இல்லாததால் அவை இருந்ததா அல்லது மாயமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

    எங்கள் முன்னோர்கள் இந்த கோவிலைப்பற்றி பலவித கருத்துகளை கூறி வந்தனர். சாணார்பட்டி, வீரசின்னம்பட்டி, மேட்டுக்கடை, ராகலாபுரம் உள்பட சுற்றுவட்டார கிராமமக்கள் இங்கு தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டு திருவிழாவும் எடுத்துள்ளனர்.

    வீடுதோறும் ெபாங்கல் வைத்து தங்கள் உறவினர்களுடன் மகிழ்ந்து தங்கள் நேர்த்திக்கடனையும் செலுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த கோவில் பாழடைந்த நிலையில் இருப்பது இப்பகுதி மக்களுக்கு வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. எனவே அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து நித்யகால பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

    இந்த கோவில் பழங்கால கட்டிட முறைகளின் படி செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் ஆகியவை கலந்துகட்ட ப்பட்டுள்ளது. இதனால் கட்டிட சுவர் வலிமையானதாக உள்ளது. இங்குள்ள அரசமரம் மற்றும் வேப்பமரம் ஆகியவை பிரமாண்டமாக வளர்ந்து கோவில் வாசற்படியை மறைத்து உள்ளது.

    இதனால் ஒருவர் மட்டுமே உள்ளே சென்று வரும் வகையில் உள்ளது. மேலும் மரத்தின் வேர்கள் பெருமாள் சையனகோலத்தில் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலங்கள் தனியார்வசம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்துசமய அறிநிலையத்துறை பல்வேறு கோவில்களில் ஆய்வு நடத்தி கும்பாபிஷேகம் நடைபெற வழிசெய்து வருகிறது.

    மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது.அதன்படி இங்கு அமைந்துள்ள பெருமாள் கோவிலையும் புனரமைத்து வழிபாடு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×