search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடகள போட்டியில் சாதனை படைத்த கல்லூத்து மாணவிக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் பாராட்டு
    X

    நெல்லை தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன், மாணவி அபிநயாவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தியபோது எடுத்த படம்.

    தடகள போட்டியில் சாதனை படைத்த கல்லூத்து மாணவிக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் பாராட்டு

    • அபிநயா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.
    • மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து அபிநயாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா. இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி அபிநயா சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் உடையவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

    இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைந்த வீரர்,வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்ற 100 மீட்டர் தூரத்தை 11.84 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 1000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் பங்குபெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தையும் வென்றது. இரு பதக்கங்களுடன் சொந்த ஊரான கல்லூத்து கிராமத்திற்கு திரும்பிய அபிநயாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான தங்கப்பதக்கம் பெற்று வருவது தன்னுடைய லட்சியம் எனவும் தெரிவித்தார்.

    மேலும் அவருக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் மற்றும் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயண சிங்கம், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க செயலாளர் விஜய்சிங்ராஜ், தென்காசி மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் குமார் பாண்டியன், தொழிலதிபர் எஸ்.கே.டி.பி.செந்தில், பிச்சையா மற்றும் பலர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    Next Story
    ×