search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

     தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பருவதன அள்ளி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (21). கொத்தனார் தொழில் செய்து வருகிறார். இவரும் சரண்யா (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இருவருக்கும் ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 11-ம் தேதி மாலை சந்தோஷ் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை..புகாரின் பேரில் பென்னா கரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல் பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது பட்டதாரி பெண். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு வீட்டிற்கு வந்த சிறுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் சிறுமியின் தாய் ஏரி வேலைக்கு சென்றவர் மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து தாய் மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல் பாப்பா ரப்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (53). இவரது மகள் தேவதர்ஷினி (23) . சசிகலா பாப்பாரப்பட்டி துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தேவ தர்ஷினி எம். எஸ்.சி, பி.எட் முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் தேவதர்ஷினி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மனைவி, உறவினர்கள் மீது வழக்கு பதிவு
    • உடற் கூறு ஆய்வுக்கு பின் மீண்டும் உடலை அடக்கம் செய்தனர்.

       தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கீரைப்பட்டி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலி தொழிலாளி இவர், கடந்த 1-ம் தேதி அவரது வீட்டின் முன்புறம் உள்ள வள்ளிமதுரை பாசன கால்வாயில் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட குடும்பத்தினர், காவல் மட்டும் வருவாய்த் துறைக்கு தெரிவிக்காமல் புதைத்து விட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், அரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், சந்தே கத்திற்கிடமாக உயிரிழந்த ராஜாவின் உடலை, காவல் மற்றும் வருவாய்த் துறையி னருக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென தெரி வித்துள்ளார்.

     இதன்பேரில், ராஜாவின் மனைவி கனகா (34) மற்றும் உறவினர்கள் சிலர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து அரூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்ததாக உயிரிழந்த ராஜாவின் தயார் ராதாமணி, கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் அரூர் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி, தலைமையிலான காவல் ஆய்வாளர் பாஸ்கர பாபு , மருத்துவர் வசந்த், மூத்த மருந்தாளுனர் கோவிந்தராஜ், உள்ளிட்ட குழுவினர்கள் அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற் கூறு ஆய்வு செய்தனர், உடற் கூறு ஆய்வுக்கு பின் மீண்டும் உடலை அடக்கம் செய்தனர்.

     உடற் கூறு ஆய்வுகள் குறித்து காவல் மற்றும் வருவாய் துறையிடம் கேட்டபோது உடலுறுப்புகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் பிறகு வரும் தகவலை பொறுத்துத்தான் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை யும்,சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    • 9 வீடுகளிலும் நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றனர்.
    • 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர்.

     தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளிமண்டி பின்புறம் பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான இடத்தை கடந்த 30 ஆண்டுகளாக தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சி செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்குள் தாமதிக்காமல் வீட்டை காலி செய்து இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்ற ப்பட்டு பேரூராட்சி க்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு நோட்டிஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலையில் பேரூராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 9 வீடுகளிலும் குடியிருப்பவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி கையெழுத்து பெற்றனர்.

    மேலும் அறிவிப்புவீட்டு கதவிலும் ஒட்டினர்.ஆனால் அறிவிப்பு விடுத்து 3 மாதங்களாகியும் வீட்டை காலி செய்யாததால் மாவட்ட ஆட்சியர் சாந்தி உடனடியாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இன்று பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து வீடுகளையும் இடித்து பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். அது சமயம் பாதுகாப்பு பணியில் பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தருமபுரியில் கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
    • குடிப்பழக்கத்தால் விபரீதம்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள எட்டிமரத்துப்பட்டி பகுதியை சேந்தவர் நரசிம்மன்(55) விவசாயி. இதே பகுதியில் இருந்து கொண்டு 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று 3 மதியம் 2 மணியளிவில் மது அருந்து விட்டு நடந்து வந்துள்ளார்.

    அப்போது நிலைமடுமாறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தார். இதனை கண்ட அவரது மனைவி ராணி உறவினர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் தீயணைப்புத்து றையினருக்கு தகவல் தெரி வித்தனர். அவர்கள் விரைந்து கிணற்றில் தேடி இறந்த நிலையில் இருந்த நரசிம்மனை மீட்டனர். இது குறித்து ராணி அளித்த புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் 20 பவுன் தங்க நகை, 3 பணம் கொள்ளையடித்து சென்றனர்.
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

    பர்கூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முன்னாள் ராணுவ வீரர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளியை சேர்ந்தவர் ராஜப்பன் (வயது 68). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி தங்கம்மாள். கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டி விட்டு காஞ்சீபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் கதவை அவர்கள் திறந்து பார்த்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.

    நகை, பணம் கொள்ளை

    அப்போது பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து ராஜப்பன் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    முன்னாள் ராணுவ வீரர் ராஜப்பன் வீட்டில் இல்லா ததை நன்கு நோட்டமிட்டு கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கந்திகுப்பம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.3 ல்டசம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தருமபுரி அருகே திம்மராய பெருமாள் கோவிலில் மணியை திருடி சென்ற திருடன்
    • சி.சி.டிவி. பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை

    தருமபுரி அருகே உள்ள சோகத்தூரில் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கம்போல் நேற்று முன்தினம் பூசாரி பூஜை முடித்து விட்டு பூட்டிவிட்டு சென்று விட்டார். மீண்டும் கோவிலை திறக்க நேற்று காலை வந்து கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி ஊர் பொதுமக்களிடம் தகவல் கூறினார். இதனை அடுத்து கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பார்த்தபோது கோவிலில் அதிகாலை புகுந்த திருடன் கோவில் கேட்டின் பூட்டை உடைத்து உண்டியலை உடைக்க முயன்றுள்ளான்.

    உண்டியலை உடைக்க முடியாத நிலையில் ஆத்திரமடைந்த திருடன் வந்ததற்கு ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கத்தில் சாவகாசமாக கோவிலில் இருந்த தீபாராதனை தட்டு, தீர்த்தவட்டல், சடாரி, மணி, மற்றும் உற்சவர் வைக்கும் செம்புத்தகடு ஆகிய பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் கோவிலில் சி.சி.டி.வி., இருப்பது கூட தெரியாததால் பதற்றமில்லாமல் பூட்டை உடைத்து கோயிலில் உள்ள பொருட்களை திருடி செல்கின்ற வீடியோ வெளியாகி உள்ளன. கோவில் திருட்டு சம்பவம் குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி அருகே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
    • மனைவியிடம் போலீசார் விசாரணை

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இந்திரா நகர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் ராதாமணி மகன் ராஜா (வயது 40). லாரி டிைரவர்.இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆன நிலையில் 14 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்து தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ராஜா கடந்த 30-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரட்டாறு கால்வாய் பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்லும் போது ராஜா பிணமாக கிடந்தார்.

    அவரது உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் இருந்ததை பார்த்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜா வின் உடலை கிராமத்தினர் அவரது வீட்டிற்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அங்கு தனது கணவரின் உடலை பிணமாக கொண்டு வருவதை கண்டு ராஜாவின் மனைவி கனகா கதறி அழுதார்.

    இதுகுறித்து அரூர் போலீசாருக்கும் மற்றும் வருவாய் துறைக்கும் தகவல் தெரிவிக்கலாம் என்று கிராம மக்கள் சொல்லிய போது அவரது மனைவி கனகா மறுப்பு தெரிவித்த நிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதுகுறித்து ராஜாவின் தாயார் ராதாமணி அரூர் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்து உயிரிழப்புக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என்று கூறி புகார் கொடுத்துள்ளார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசர் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்த நிலை யில் போலீஸ் அவசர கட்டுப்பாட்டுக்கு தகவல் கொடுத்த பிறகு அந்த தகவலின் பெயரில் அரூர் போலீசார் தற்போது புகாரை பெற்றுக் கொண்டு மர்மமான முறையில் உயிரிழந்த ராஜாவின் மனை வியை விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேலும், ராஜாவின் சாவுக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தாயார் ராதாமணி மற்றும் உறவினர்கள, இந்திரா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் போலீஸ் நிலையம் முன்பு காத்திருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தரும்புரியில் சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெசவாளர் காலனி உள்ளது. இதன் அருகே சேலம்- தருமபுரி முக்கிய சாலையான நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது இந்த கழிவு நீர் கால்வாயில் நெசவாளர் காலனி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் சேர்ந்து 4 ரோடு வரை கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

    இந்த நிலையில் நெசவாளர் காலனி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு நேதாஜி பைபாஸ் சாலையான முக்கிய சாலையில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறு மழைக்கே கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது நேதாஜி பைபாஸ் சாலையில் 4 ரோடு வரை ஒரு கிலோமீட்டருக்கு செல்கிறது. பெருமழை வரும்போது நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது மட்டுமின்றி நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நாளிதழ்களில் பலமுறை செய்தி வெளியிட்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி நகரப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் முக்கிய சாலையில் மழைக்கா லங்களில் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதை வருட கணக்கில் கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நேதாஜி பைபாஸ் சாலை இரு புறமும் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தருமபுரி அருகே 17 வயது மாயம் ஆனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் 17 சிறுமி . கடந்த 27ந்தேதி இரவு அவரது வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து உறங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் அவரது தாய் எழுந்து மகளை பார்த்த போது காணவில்லை.

    பல இடங்களில் அவரை தேடியும் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் எங்கே போனார் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    • தருமபுரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.
    • உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து குழுக்கள் உருவாக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் கடைகளில் சோதனைகள், அபராதம் மற்றும் கடைக்கு சீல் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

    நேற்று மொரப்பூர் ஒன்றியம், கம்பைநல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கம்பைநல்லூர், இருமத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையில் , மொரப்பூர் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கம்பைநல்லூர் போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கம்பைநல்லூர், இருமத்தூர் சாலை ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பீடா கடை, வகுரப்பம்பட்டியில் 2 மளிகை கடைகள் மற்றும் இருமத்தூரில் பள்ளி அருகில் ஒரு பெட்டி கடை மேலும் மருதுபட்டி சாலை - சுண்டைக்காய்பட்டியில் ஒரு மளிகை கடை என 5 கடைகளில் சோதனை நடத்தினர்.

    அங்கு விற்பனைக்கு இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் அடிப்படையில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கியதுடன் முதல் தகவல் அறிக்கை பதிந்த 3 கடையை தவிர்த்து முதல் முறையாக பிடிபட்ட சுண்டக்காய்பட்டி மளிகை கடைக்காரருக்கும் கம்பைநல்லூர் ஜங்ஷன் பகுதியில் மீண்டும் மீண்டும் தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த பீடா கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை மூடி சீல் வைத்தனர். 

    • தருமபுரி அருகே செல்போன் திருடிய வாலிபர் கைது.
    • போலீசார் நடவடிக்கை.

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள செல்லம்பட்டி கிராமத்தை சேந்தவர் பழனி மகன் பாபு(37) லாரி மெக்கனிக் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது மெக்கனிக் ஷாப் அமைந்துள்ள அரூர்-திருப்பத்தூர் சாலையில் உள்ள தனியார் பேட்ரோல் பங்க் அருகில் பழுதான ஒரு லாரியில் டிரைவர் மஸ்தான் தனது செல்போனை வைத்து விட்டு அதே லாயில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வந்த மர்ம நபர்கள் 2 பேர் லாரியில் இருந்த செல்போனை திருடி சென்றனர்.

    இதனையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்று பாபு மற்றும் டிரைவர் மஸ்தான் இருவரும் ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவரிடம் மஸ்தான் செல்போன் இருந்தது. இது குறித்து பாபு அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் அரூர் முருகன் கோவில் பகுதியை சாமா மகன் ஷானாவாஷ்(20) என்றும் அவரது மேல்பாட்சாபேட்டை சேர்ந்த கவின் இருவரும் சேந்து செல்போனை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஷானாவாஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலை மறைவாக உள்ள கவினை தேடி வருகின்றனர். 

    • தருமபுரி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வாகனங்கள் இந்த சாலையில் செல்வதால் பழுது அடைகின்றன.

    தருமபுரி நகர பகுதியை ஒட்டியுள்ள ஆத்துமேடு பகுதியில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். தருமபுரியிலிருந்து செட்டிகரை செல்லும் வழியில் ஆத்துமேடு பகுதி உள்ளது. இந்த வழியாக அரசு பொறியியல் கல்லூரி, கேந்தர்ய வித்யாலயா, அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம், வெள்ளோலை, நாயக்கனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

    மேலும் தருமபுயில் உள்ள பள்ளி கல்லூரிக்கு செல்லவும் பணிக்கு செல்பவர்களும், விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லவும் இந்த சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 

    ×