search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன.
    • நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்ட உபரிநீர்- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வரத்தொடங்கியுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வரை வினாடிக்கு தொடர்ந்து 4 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 3039 கன அடி நீர் வெளியேற்றப்பட்டன.

    இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இந்த நீர்வரத்தானது நள்ளிரவு முதல் வரத்தொடங்கியுள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை

    தருமபுரி,

    சாலை வசதி அமைத்து தர கோரிக்கை

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சி யில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த 3 மலை கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    அடர்ந்த மலை கிராமத்தில், மலை மீது உள்ள இந்த 3 கிராமங்களுக்கும் போதிய சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமில்லை. இதனால் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு சுமார் 7 கி.மீ. தூரம் நடந்தே செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று அலகட்டு கிராமத்தை சேர்ந்த சித்தபெலான் (75) என்ற முதியவர், விவசாய நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக, வயலில் முதியவரை பாம்பு கடித்துள்ளது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த முதியவர் பாம்பு கடித்ததை தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து மருத்துவம னைக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், மூங்கிலில் போர்வையால், தூளி கட்டியுள்ளனர். அப்பொழுது பாம்பின் விஷம் உடலில் பரவாமல் இருக்க முதியவருக்கு பாம்பு கடித்த இடத்தில், சுண்ணாம்பு வைத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து, தூளி கட்டிய பிறகு, முதியவரை அமர வைத்து உறவினர்கள் எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து மலை இறங்கிய பிறகு, அடிவாரத்திலிருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மேலும் சாலை வசதி வேண்டி, மலைவாழ் மக்கள் போராடி வரும் நிலையில், இன்னும் சாலை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவ சேவைக்கு செல்ல தூளி கட்டி எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேளதா ளத்துடன் ஊர்வ லமாக புனிதநீர் கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று நேற்று மாலை வரை சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெ ருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கரகசத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது.

    இன்று காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • கற்போர் மையங்களில் 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர்.
    • 766 தன்னார்வலர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 766 கற்போர் மையங்களில் 16,063 கற்போர் எழுத்தறிவு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 766 தன்னார்வ லர்கள் பயிற்றுவித்து வருகின்றனர்.

    இந்த கற்போர் மையங்களை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இணை இயக்குநர் குமார் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை இன்று தருமபுரி ஒன்றியம் கே. ஆலங்கரை மற்றும் பலர் மரத்துக்கொட்டாய் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மையங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது இணை இயக்குநர் அவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தெரிந்து கொள்வதால் ஏற்படும் பயன்களை பற்றி விரிவாக கற்போரிடம் எடுத்துரைத்தார்.

    இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் இரவிக்குமார், துணை ஆய்வாளர் திரு.பொன்னுசாமி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.

    • மக்களவை பொதுத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளது.
    • வாக்கு எண்ணும் மையங்கள் அமை யவுள்ள இடத்தைப் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.

    தருமபுரி, 

    தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி, மக்களவை பொதுத் தோ்தல் வாக்கு எண்ணும் மையாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. 

    தருமபுரி மக்களைவைத் தொகுதியில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம், மேட்டூா் என ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. மக்களவை பொதுத் தோ்தல் 2024-இல் நடைபெற உள்ளது. இத்தோ் தலில் பதிவாகும் வாக்கு களை எண்ணும் மையமாக தருமபுரி அருகே செட்டிக் கரை அரசு பொறியியல் கல்லூரி தோ்வு செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்ட கலெக்டர் சாந்தி, அரசு பொறியியல் கல்லூ ரிக்கு நேரில் சென்று வாக்கு எண்ணும் மையங்கள் அமை யவுள்ள இடத்தைப் பாா்வை யிட்டு ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், தோ்தல் தனி வட்டாட்சியா் அசோக்குமாா், அரசு அலுவலா்கள் உடனி ருந்தனா்.

    • நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க-வும் காங்கிரசும் தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.
    • பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதியை கடந்த ஆட்சியில் அ.தி.மு.க வழங்கியது. தற்போது அனைத்தையும் ஆளும் கட்சி நிறுத்தி விட்டது.

    தருமபுரி:

    அ.தி.மு. க. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் வெற்றிவேல் மகள் திருமணத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தருமபுரி வந்தார். பின்னர் 100 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

    இன்று நடைபெற்ற 100 ஜோடி மணமக்களும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன். அ.தி.மு.க என்பது கழகம், ஒரு குடும்பம் என்பதற்கு இதுவே சான்று. இது அ.தி.மு.க.வில் மட்டுமே நடைபெறும். அ.தி.மு.க ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது.

    நாம், பா.ஜ.க கூட்டணியில் இருந்து பிரிந்தது பொறுத்துக்கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக்கொண்டு வருகிறார்கள். அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தி.மு.க தலைவர் தவறான பிரசாரத்தை செய்து வருகிறார். ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகளை தி.மு.க ஏமாற்றி வாங்கி வந்தது. தற்போது நாம் அதை வாங்கி விடுவோம் என்ற அச்சம் வந்துவிட்டது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களின் திருமணம் தடைப்படக்கூடாது என திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால் இந்த விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் அதனை நிறுத்தி விட்டார்.

    கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா குழந்தைகள் பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் ஏழை மக்களின் வசதிக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. பெண்கள் சுய உதவிக் குழுவுக்கு அதிக சுழல் நிதியை கடந்த ஆட்சியில் அ.தி.மு.க வழங்கியது. தற்போது அனைத்தையும் ஆளும் கட்சி நிறுத்தி விட்டது.

    நீட் தேர்வு குறித்து, ஸ்டாலின் மற்றும் உதயநிதி பேசி வருகின்றனர். ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க-வும் காங்கிரசும் தான் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்கள்.

    ஏழை பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. அதில் சுமார் 2000 மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். மேலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தியது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் வினியோகம் செய்யப்படுகிறது. தி.மு.க.வால் தேர்தலில் 520 வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. ஆனாலும் 100 சதவீதம் நிறைவேற்றியதாக முதல்வர் பொய் பேசி வருகிறார். தேர்தல் வாக்குறுதியில் சொல்லியதை நிறைவேற்றவில்லை.

    ஆட்சிக்கு வந்தால், அனைத்து பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்று தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன் என்று சொல்கிறார்கள். அதுவும் முழுமையாக சேரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பல நாட்களாக குப்பைகள் அள்ளபடாமல் தேங்கி யுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    தருமபுரி,

    தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட அ.கொல்ல அள்ளி பஞ்சா யத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.

    அவ்வப்போது பஞ்சா யத்து நிர்வாகம் குப்பைகளை அல்லாமல் இருப்பதால் தேங்கி கிடக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசி பொது மக்களுக்கு வைரஸ் நோய் பரவலும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கொசு பெருக்கத்தால் நோய் தொற்று பரவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பல நாட்களாக குப்பைகள் அள்ளபடாமல் தேங்கி யுள்ளது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அள்ளி தூய்மை பணி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • கணவர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார்.
    • 4 வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் செய்து கொண்டார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகமரை, நெருப்பூர் காட்டுக் கொட்டாய் அருகே உள்ள மஞ்சார அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி சம்பு (வயது38). இவர்களுக்கு ஒரு மகனும், விசாலனி (19) என்ற மகளும் உள்ளனர்.

    சம்புவின் கணவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து சம்பு கூலி வேலைக்கு சென்று தனது மகளையும், மகனையும் படிக்க வைத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் சம்புவின் மகள் விசாலனி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபோது ஏர்கோல்பட்டி அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதனால் ரமேஷ் விசாலனியை கடந்த 4 வருடத்திற்கு முன்பு குழந்தை திருமணம் செய்து கொண்டார்.

    இது சம்பந்தமாக பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே விசாலனியுடன் ரமேஷ் சேர்ந்து வாழ்ந்தனர். இதில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் விசாலனிக்கும், ரமேசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை விசாலின் தனது தாயிடம் போனில் கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று விசாலனி வீட்டின் அருகே உள்ளவர்கள் சம்புவுக்கு போன் செய்து உன் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்தனர். தகவலறிந்த சம்பு உடனே நேரில் சென்று பார்த்த போது தனது மகள் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

    இதுகுறித்து சம்பு ஏரியூர் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாலனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாலனி அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலித்த ரமேசை கரம் பிடிக்க சிறுவயதில் திருமணம் செய்து கொண்ட விசாலனி 4 வருடங்கள் ஆன நிைலயில் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்களிடம் தருமபுரி ஆர்.டி.ஓ விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விசா லனியின் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,  

    தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களுக்கான கலைப் போட்டிகள் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இள ஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு, கருணாநிதி நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.

    அந்த ஆணையின்படி தருமபுரி மாவட்ட கலை பண்பாட்டு துறை சார்பில் அரசு கலைக்கல்லூரியில் இன்று கலை போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை கலைப் பண்பாட்டு துறை உதவி இயக்குனர் நீலமேகம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் கலைப்போட்டிகள் நடைபெற்றது. கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைசிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் இளை–ஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    • ரூ. 261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்ப ட்டுள்ளது.
    • இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது கல்விக்கடன் வழங்கப்பட்டு வரும் சதவீதம் மிக குறைந்த அளவில் இருக்கிறது. இதனை அதிகரிக்கும் வகையிலும் பயனடையும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முன்னெ டுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை 11.625 நபர்களுக்கு ரூ. 261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்ப ட்டுள்ளது. இன்றையை தினம் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முலாமில் 93 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 10.83 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

    பல்வேறு வங்கிகள் மூலம் 2023 - 2024 ஆண்டில் இதுநாள் வரை மொத்தம் 370 மாணவ மாணவியர்களுக்கு ரூ. 23. 13 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில் 5, 000 மாணவ. மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www. vidyalak shmi. co. in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும் ஆவணங்களை கொடுத்து முறையாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது.
    • விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது. இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி, தடுப்பூசி, தாது உப்பு கலவை , மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டன.

    மேலும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தா ளுனர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கே ற்றனர். 

    ×