search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது.
    • விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக கால்நடை களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கர்த்தானூரில் நடை பெற்றது. இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி, தடுப்பூசி, தாது உப்பு கலவை , மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட வைகள் வழங்கப்பட்டன.

    மேலும் சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர்கள் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தா ளுனர்கள் விவசாயிகள் என ஏராளமானோர் பங்கே ற்றனர். 

    • இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார்.

    தருமபுரி

    தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

    குமாரசாமிப்பேட்டையில் சூரசம்கார விழா

    தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது

    ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கி யது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு கள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நாளான கந்த சஷ்டியை யொட்டி இன்று அதிகாலை யில் சாமிக்கு மஞ்சள், இளநீர், பால், தயிர் மற்றும் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முருகபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பா–லித்தார். சிவசுப்பரமணிய கோவிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று இரவு அலங்கரிக்கப்–பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வான வேடிக்கையுடன் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெரு–மான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறு கிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

    இதேபோன்று தருமபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள விநாயகர் சிவசுப்ர–மணியர் கோவில், எஸ்.வி. சாலையில் உள்ள முருகன் கோவில், டிரசரி காலனியில் உள்ள முருகன் கோவில், நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் இன்று கந்த சஷ்டியை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, அரூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • வண்டியை ஓட்டி வந்த டிரைவர் மினி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.
    • மினிலாரியில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சு மெத்தை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினிலாரி புறப்பட்டு வந்தது. இந்த தருமபுரி அருகே மணியக்காரன் கொட்டாய் கிராமத்தின் அருகில் இன்று அதிகாலை வந்தபோது திடீரென அந்த மினிலாரியில் தீ பற்றி எரிந்தது. உடனே வண்டியை ஓட்டி வந்த டிரைவர் மினி லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

    இந்த தீ விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மினிலாரியில் பிடித்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம் அடைந்துவிட்டது.

    இதுகுறித்து பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில் பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்த தித்தியோப்பனஅள்ளி திகிலோடு கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் அய்யாசாமி (வயது 30) என்பவர் மினிலாரியை ஓட்டி வந்ததும், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மினிலாரியில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி ஏல அங்காடிக்கு வரத்து குறைவு:
    • ரூ.5.96 லட்சத்திற்கு விற்பனையானது.

     தருமபுரி, 

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாத புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழ கம் முழுவதும் உள்ள பட்டுக் கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளு கின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், 52 விவசாயிகள் கொண்டு வந்த 4053 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.16.58 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இந்த நிலை யில் நேற்று திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்து 28 விவசாயிகள் கொண்டு வந்த 1521 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் ரூ.503-க்கும் அதிகபட்சம் 241 ரூபாய்க்கும் சராசரி 391 ரூபாய் என மொத்தம் 5.96 இலட்சத்திற்கு விற்பனையானது.

    தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தமிழகத்தில் உள்ள மாவட் டங்களில் இருந்து பட்டுக் கூடு வரத்து அதிகரித்த நிலையில் மழையின் காரண மாக திடீரென விவசாயிக ளின் வரத்து குறைந்துள்ள தாக அதிகாரிகள் தெரிவித்த னர்.

    • 100 முதல் 150 பூக்கள் வரை தொடந்து 6 மாதம் வரை பூக்கும்.
    • அறுவடை கூலி கூட கிடைக்காததால் விவசாயிகள் வேதனை

     பாப்பிரெட்டிப்பட்டி. 

    தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், அரூர், பென்னாகரம், மா ரண்ட அள்ளி, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிக ளில் விவசாயிகள் பரவ லாக சாமந்தி பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    சாமந்தி மிதவெப்ப மண்டல பயிராகும், தரும புரி மாவட்டத்தில் சாமந்திப் பூக்கள் தரமாக வருவதற்கு நீர் தேக்கம் உள்ள வடிகால் வசதி, குறைந்த கனமான களிமண் அதிக அளவில் காணப்படுவதால் விவசாயிகள் விரும்பி இந்த சாமந்தி மலர் சாகுபடியில் ஈடுபடுகின்றனர்

    நடவு செய்த 3 மாதத்திற்கு பிறகு ஒரு செடியில் 100 முதல் 150 பூக்கள் வரை தொடந்து 6 மாதம் வரை பூக்கும். ஜூன் மாதத்தில் பயிரிடப்பட்ட சாமந்தி பூக்கள் ஜனவரி மாதம் வரை சாகுபடி செய்யப்படுகிறது.

    குறிப்பாக மத வழிபாடு, சமூக நோக்கம், மாலை மரியாதை, தீபாவளி, ஹோலி பண்டிகை, தெய்வ வழிபாடு என தொடர்ந்து மத நிகழ்ச்சிகளிலும், நல்ல காரியங்களிலும், இந்த பூக்கள் முக்கிய இடம் பிடிப்ப தால் நம்பிக்கையுடன் விவசாயிகள் பயிரிடு கின்றனர்

    மேலும் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சியில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    விவசாயிகள் நிலத்தை உழுது, பயிர் நடவு செய்து, மருந்து தெளித்து பராம ரிப்பு செய்து வந்த நிலையில் அறுவடை கூலி கூட கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்ற னர். இதனால் தங்கள் குடும்பத்தின் 6 மாத உழைப்பு வீணாக சென்று தற்போது தாங்கள் கடனாளி யாகியுள்ளதாக வேதனை தெரி விக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில்:-

    தங்கள் குடும்பமே ஜூன் மாதம் முதல் கடந்த 4 மாதங்களாக கடுமையாக உழைத்து, கடன் வாங்கி மருந்து தெளித்து நோய் நொடியில் இருந்து மலர்க ளை காப்பாற்றுதல், கூலி ஆட்களுக்கு கூலி கொடுத் தல், அதிகாலையில் குடும் பத்துடன் எழுந்து மலர் அறுவடையில் ஈடுபடுவது, இவ்வளவு வேலையில் ஈடுபட்டு தற்போது அறு வடை காலத்தில் உரிய விலை கிடைக்காததால் தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

    மேலும் தொடர்ந்து 2 மாதங்களாக விலை வீழ்ச்சி யை நோக்கியே இருப்பதா கவும், தீபாவளியின் போது ரூ.20 ரூபாய்க்கு மட்டுமே கிலோ விற்றதாகவும், தற் போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சாமந்தி பூவுக்கு உரிய விலை கிடைக்காததால் கடனாளி யாக மாறும் சூழலுக்கு தங்கள் குடும்பமே தள்ளப் பட்டுள்ளதாகவும் விவசாயி கள் வேதனை தெரிவிக்கின்ற னர். எனவே அரசு தங்க ளுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

    மேலும் வருகின்ற காலங்களில் ஐயப்பன் பக்தர்கள் சீசன் பூஜைக்கா கவும், மலர்கள் அதிக அளவில் பயன்படுத்தி னாலும், வருகின்ற பண்டி கை காலங்கள் புத்தாண்டு, பொங்கல் போன்ற காலங்க ளில் ஓரளவிற்கு விலை உயர்ந்தால் மட்டுமே விவசா யிகள் கடனிலிருந்து மீள முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    • குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு முரளியும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பி. பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (42). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷகிரா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு சந்தர் (5), லூர்து என்ற 2 ஆண்குழந்தை கள் இருந்தனர். குடும்பத்த கராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இருவருக்கும் சமரசம் ஏற்ப்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தபோது மீண்டும் குடும்பதகராறு ஏற்ப்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் மனமுடைந்த முரளி கடந்த 24.8.2017 அன்று 2 ஆண் குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு முரளியும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி சந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பொம்மிடி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இறுதிகட்ட விசாரணை முடிந்து முரளி குற்றம் செய்தது உறுதியான தைய டுத்து கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும், தற்கொலை முயற்சி வழக்கில் 1 வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் வாதாடினார். 

    • 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டுக்காரன அள்ளி ஊராட்சி, தொட்டா ரதனஹள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம பொதுமக்க ளுக்காக சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தினந்தோறும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தினம் தோறும் நிரம்பி வழிவதால் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்ப டுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒகேனக்கல் குடிநீரை சீராக அனைத்து பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
    • குருசாமி பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார்.

    தருமபுரி,நவ.17-

    கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

     கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சபரிமலைக்கு மாலை அணிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் கொள்வார்கள். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கேரளாவில் உள்ள சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டல பூஜைக்காக 42 நாட்கள் நடை திறந்திருக்கும்.

    இந்நிலையில் இன்று கார்த்திகை முதல்நாள் என்பதால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி நீரில் புனித நீராடி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். அதேபோல தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி நேற்று அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம், 1-ந் தேதி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி காலை, 5 மணிக்கு கிருஷ்ணகிரியில், சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

    ஐயப்பன் கோவிலில் உள்ள குருசாமி பக்தர்களுக்கு துளசி மாலை அணிவித்தார். சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இதையொட்டி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. நேற்று, 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து கொண்டனர்.

    • பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி அடுத்த அன்னசாகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவர் அந்தப் பகுதியில் வாகனங்களுக்கு பட்டை வேலை செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

    சேலம் சீல்நாயக்கன் பட்டியில் தலைமை இடமாக கொண்டு நகை கடை நடத்தி வரும் சபரி சங்கர், என்பவர் தருமபுரியில் பி.ஆர். சுந்தரம் ஐயர் தெரு அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் தங்க நகை கடை நடத்தி வருகிறார்.

    அந்த கடையில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு குமாரின் மனைவி பிரமிளா, 3 பவுன் தங்க செயின் எடுத்து உள்ளனர். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் தாரமங்கலத்தைச் சேர்ந்த விஜயராஜ், சேலத்தைச் சேர்ந்த முரளி, விஜய், பிரகாஷ் ஆகியோர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு குமாரிடம் தங்களது கடையின் கிளைகள் சேலம், தருமபுரி உட்பட 11 இடங்களில் கிளைகள் இருப்பதாகவும், மேலும் தருமபுரி சுந்தரம் ஐயர் தெருவில் உள்ள கடையில் நீங்கள் முதலீடு செய்தால் நிறைய வட்டி கிடைக்கும் என்றும் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு 3 சதவீதம் மாத மாதம் வட்டி தருவதாகவும், பழைய தங்கத்தை கொடுத்தால் ஒரு வருடம் கழித்து புது ஆபரணங்கள் செய்கூலி சேதாரம் இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறினர். அதை நம்பி குமார் தனது மனைவியின் 248.21 கிராம் எடையுள்ள பழைய தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

    ரூ.12 லட்சம் ரூபாய் பலதரப்பட்ட தேதிகளில் செலுத்தி அதற்கும் ரசீது பெற்றுள்ள நிலையில் அதற்கு உண்டான வட்டி பணத்திற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

    மேலும், நகை சேமிப்பு திட்ட திட்டத்தில் ஒர்க் ஷாப் கடையில் வேலை செய்யும் தொழிலாளிகள் அஜித் குமார், சிவக்குமார், ஆகியோர்களின் பெயரிலும், மனைவி பிரமிளா பெயரில் அட்சய பாத்திரம் நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.10,000-ம் வீதம் 2 சீட்டுகள் கட்டும் விதமாக பணத்தை கட்டி வந்ததாகவும் தான் முதலீடு செய்த பணத்திற்கு உண்டான வட்டி பணத்தை சீட்டில் செலுத்தியது போக மீதமுள்ள பணத்தை தன்னுடைய தாய் செல்வி வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் செலுத்தி உள்ளனர்.

    முதலீடு செய்த பணத்திற்கான முதிர்வு காலம் முடிந்த பிறகு பணத்தையும் நகையையும் திருப்பி தருவதாக நகைக்கடையில் வேலை செய்து வரும் விஜய், முரளி, சின்னத்தம்பி, மற்றும் பிரகாஷ் ஆகியோர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கேட்பதற்காக கடந்த 12-ந் தேதி குமார் கடைக்கு சென்று பார்த்தபோது அந்த கடை ஏற்கனவே பூட்டப்பட்ட நிலையில் முதலீடு செய்தவர்கள் நிறைய பேர் கடைக்கு முன்பு கூடியிருந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தகுமார் கடையின் மேலாளருக்கு போன் செய்து கேட்டபோது கடை திறக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் கடை இன்று வரை திறக்கவில்லை தான் ஏமாற்றப்பட்டதாக தெரியவந்தது.

    இதுகுறித்து குமார் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம், நகை கடையில் முதலீடு செய்ததில் ரூ.28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி மோசடி செய்த கடையின் உரிமையாளர் சபரி சங்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கடையின் நிர்வாக அதிகாரி முரளி ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் பறிமுதல் போலீசார் விசாரணை
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    பென்னாகரம், 

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பளிஞ்சரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மோகன் (வயது 27).

    இவர் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதி மளிகை கடைகளுக்கு மளிகை பொருட்களை 3 சக்கர ஆட்டோ மூலம் விற்பனை செய்து வருகிறார். இவர் சுற்று வட்டாரம் மளிகை கடைகளுக்கும் குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களும் விற்பனை செய்வதாக பென்னாகரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    ரகசிய தகவலின் பெயரில் பென்னாகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோவிந்தசாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் ரகசியமாக கண்காணித்தனர்.இதையறிந்த தலைமறைவாக மோகனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து குட்கா விற்பனைக்காக பயன்படுத்தி வந்த 3 சக்கர ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைதான மோகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசசை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும். வாழ்வா தாரமற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை முடக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
    • வனப்பகுதியை கடந்து செல்லும்போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்ட வனஹள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் மலை, அலகட்டு மலை கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு நில மற்ற மலைவாழ் மக்கள் பெங்களூரு, ஓசூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கட்டிட வேலைகள் உள்ளிட்ட பல்வேறு பணி களை செய்து வருகின்றனர்.

    பல தலைமுறைகளாக மலை கிராமத்தில் வாழ்ந்து வருவதால் இந்த 3 கிராம மக்களும் உயர்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு மலையை விட்டு கீழே இறங்கி வருவதற்கு சாலை வசதி கேட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மக்களுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏற்படுத்தி தர முடியாமல் அரசு இருந்து வருகிறது.

    இந்நிலையில் கிராம மக்களே ஒன்றிணைந்து மண் சாலை அமைத்து, சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

    ஆனால் மழை வருகின்ற பொழுது இந்த மண் சாலை முழுவதுமாக மண் அரிப்பு ஏற்பட்டு பயன்படுத்த முடி யாத நிலையில் இருந்து வரு கிறது. இதனால் வனத்துறை சாலை அமைக்க அனுமதி கொடுத்தால், மத்திய, மாநில அரசுகள் சாலை வசதி செய்து தர முடியும். இதனால் கிராம மக்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், பல ஆண்டுகளாக போராடியும் வருகின்றனர்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்ட வனத் துறை சார்பில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம், முறையாக நடைபெறும் என தெரிவித்த வன அலுவலர் அப்பல்லோ நாயுடு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் ஏரிமலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்கு வனத் துறை அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி கோரிக்கை வைத்தும் இதுவரை வனத்துறை இம்மியளவும் நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர்.

    ஏரி மலையில் 65 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மற்ற இனத்தவர்கள் சேர்ந்து 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் கேட்டு ஓய்ந்து போய் குழந்தைகளின் கல்விக்காகவும் அடிப்படை தேவைகளுக்காகவும் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மலை கிராமத்தை விட்டு விட்டு நகரங்களை நோக்கி சென்று விட்ட னர். எஞ்சியுள்ள 150 குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர்.

    மலை கிராம குழந்தைக ளுக்காக இங்கு அங்கன்வாடி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 15 குழந்தைகள் உள்ளனர். ஒரு ஆசிரியர் உள்ளார். மேலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 26 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

    மேலும் 11 மற்றும் 12-ம்

    வகுப்பு பயில்வதற்கு மலை கிராமத்தை விட்டு மலையடிவாரத்தில் உள்ள சீங்காடு, மற்றும் திருமல்வாடி, பாலக்கோடு பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்ல வேண்டும் தினமும் பள்ளிக்குச் சென்று வர வனப்பகுதியை கடந்து செல்லும்போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளது.

    தினமும் 4 கிலோ மீட்டர் மலை ஏறி இறங்க வேண்டும் இதுபோன்ற இன்னல்களால் உயர்கல்வியை தொடர முடியாமல் மாணவிகள் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை முடிப்பதால் உயர்கல்வி என்பது மலை கிராம மாணவர்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது.

    மேலும் அந்த மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவை களுக்காக பொருட்களை வாங்க கீழே தான் சென்று வர வேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆன நிலையிலும் தங்களது கிராமத்திற்கு சாலை வசதி இல்லாது இருப்பதால், உடல்நிலை சரியில்லாத நேரங்களிலும், கர்ப்பிணி பெண்களை பிரசவ காலத்தில் தூளி கட்டி எடுத்து செல்லும் போதும் பாதை இல்லாததால் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    பாம்பு உள்ளிட்ட விஷ கடியில் பாதிக்கப்பட்ட வர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கால தாமதம் ஏற்படுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் பாதை சறுக்குவதால் பொது மக்கள் சிலர் விழுந்தும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    மலைவாழ் மக்களின் அடிப்படை தேவையான சாலை வசதியை அமைத்துக் கொடுத்தால் அப்பகுதி மக்கள் இந்திய குடிமகன்களாக தலை நிமிர்ந்து நிற்போம் என தலைமுறைகளோடு 77 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    எனவே ஏரிமலை முதல் சீங்காடு வரை தார் சாலை அமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என மலை கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    ×