search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பாலக்கோடு பகுதியில் வாகனஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கரோ அல்லது கருப்பு பெயின்ட் எதுவும் ஒட்டாமல் அப்படியே இரவு நேரங்களில் ஓட்டி செல்கின்றனர். இதன் காரணமாக அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
    • பாலக்கோடு பகுதியில் இரவு நேரத்தில் விபத்துகளை தவிர்க்க வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, வெள்ளிச்சந்தை, பாலக் கோடு, காரிமங்கலம், பெரியம்பட்டி, புலிகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் கனரக வாகனங்கள் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கிற்கு நடுவில் கருப்பு பெயின்ட் அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

    ஆனால், தற்போது ஓட்டுநர்கள் மற்றும் இளைஞர்கள் இதுபோன்று வாகன முகப்பு விளக்கிற்கு கருப்பு ஸ்டிக்கரோ அல்லது கருப்பு பெயின்ட் எதுவும் ஒட்டாமல் அப்படியே இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர விட்டு ஓட்டி செல்கின்றனர்.

    இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசுவதுடன் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. மேலும் பல வாகனங்களில் எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதால் அதிகமாக கண் கூசுவதாகவும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருவதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போலீசார் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெகுநேரம் முடிந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டின் பூட்டை கற்களை கொண்டு உடைத்தனர்.
    • பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வர தொடங்கி விடுகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே தாளப்பள்ளம் (குள்ளனூர்) அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தருமபுரி ஒகேனக்கல் நெடுஞ்சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பள்ளியில் அரங்காபுரத்தை சேர்ந்த வேலு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை 5 மணிக்கு பள்ளியின் கேட்டை தலைமை ஆசிரியர் முன்னிலையில் பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் காலை 8 மணிக்கு கேட்டின் பூட்டை திறக்க வேண்டும். ஆனால் 9 மணியை கடந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் கேட்டின் முன்பு குவிந்தனர்.

    வெகுநேரம் முடிந்தும் கேட்டின் பூட்டு திறக்கப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டின் பூட்டை கற்களை கொண்டு உடைத்தனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் உள்ளே சென்றனர்.

    இப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருவதால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வர தொடங்கி விடுகின்றனர். ஆனால் அரசு பள்ளி நிர்வாகமோ மாவட்ட கல்வி துறையோ இது போன்று அலட்சியமாக இருந்து மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை சிதைத்து விடுகின்றனர்.

    இப்பள்ளிக்கு நீண்ட நாட்களாகவே காவலாளி வேலு காலதாமதமாகவே வந்து பள்ளி திறந்து வைக்கிறார் என்றும், இதுகுறித்து பல முறை தலைமை ஆசிரியர் கண்டித்தும் அலட்சியமாகவே இருந்து வருகிறார் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தீபாவளி பண்டிகையொட்டி விடுமுறைக்கு வந்தவர்கள் மீண்டும் வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் அரூர் பஸ் நிலையத்தில் 2-வது நாளாக நேற்று அதிகமாக காணப்பட்டது.
    • வெளியூர்களுக்கு செல்லும் மக்களால் அரூரில் தற்காலிக பஸ் நிலையத்தில் இரவு, பகல் என மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அரூர்:

    நாடு முழுவதும் கடந்த 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி அரசு சார்பில் நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது. ஒரு சில நிறுவனங்கள் செவ்வாய்கிழமை வரையும் விடுமுறை அளித்தது.

    இதனையடுத்து சொந்த ஊர் திரும்பிய மக்கள் கொண்டாட்டங்கள் முடிவடைந்து அவரவர் பணியிடங்களுக்கு படிப்பதற்கும் ஊர் திரும்பும் மக்களால் நேற்று வரை பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    அரூர் பஸ் நிலையத்தில் சேலம், கோயமுத்தூர், சென்னை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களால் அரூரில் தற்காலிக பஸ் நிலையத்தில் இரவு, பகல் என மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று இரவு வரையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    • தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • குழந்தைகள் தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைைமையில் அதிகாரிகள் உறுதிெமாழியினை ஏற்றுக் கொண்டனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வண்ணம் குழந்தைகளுக்கான நடைப்பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சமூகப் பாதுகாப்புத்து றையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற குழந்தைகளுக்கான நடை பயணம் மற்றும் விழிப்புணர்வு பேரணி யினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

    இப்பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி- சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று மீண்டும் அதேவழியாக இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது.

    முன்னதாக, மாவட்ட அலுவலகத்தில் குழந்தைகள் தின உறுதிமொழி கலெக்டர் கி.சாந்தி, தலைமையில் ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்வுகளின் போது மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா, சமூகநல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம் மற்றும் அனைத்து துறை அலுவ லர்கள் கலந்துக்கொண்டனர்.

    • அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்கரஅள்ளி நடுநிலைப் பள்ளியில் 152 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும். பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தனது அறையை திறந்தார்.

    அப்போது அறையில் இருந்த பிளாஸ்டிக் சேர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குவதற்காக வைக்கப்பட்டு இருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அவர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடத்தூர் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.

    தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்குள் நுழைந்து, தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னலை திறந்து தீ வைத்து சென்றிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பள்ளிக்கு காம்பவுன்ட் சுவர் இல்லாததால் பல நேரங்களில் மர்ம நபர்கள் மது குடிப்பதற்காக பள்ளி கட்டிடப்பகுதியை பயன்படுத்தி வருகின்றதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வியாபாரிகள் கவலை
    • சாமந்தி ரூ. 50-க்கு விற்பனையானது.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெலமா ரனஅள்ளி, திருமல்வாடி, கரகூர், ஐந்து மைல்கள், பாப்பாரப்பட்டி, பென்னா கரம், இண்டூர், அதக்கப்பாடி, பாலவாடி, நல்லம்பள்ளி, தொப்பூர், சாமி செட்டிபட்டி, கெட்டூர், மொரப்பூர், பாப்பி ரெட்டிப் பட்டி, கம்பைநல்லூர், பிக்கிலி மலை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசா யிகள் பல ஆயிரம் ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு விளையும் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி, பன்னீர் ரோஸ், சன்னமல்லி, குண்டுமல்லி, கோழி கொண்டை, அரளி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களை விவசாயிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் இன்று சம்பங்கி கிலோ ரூ.20, சாமந்தி ரூ. 50, பன்னீர் ரோஸ் ரூ. 100, அரளி ரூ. 100, சன்னமல்லி கிலோ ரூ. 400, குண்டு மல்லி கிலோ ரூ. 400, கனகாம்பரம் ரூ. 600, என்ற நிலையில் இன்று பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை விற்பனை செய்யப் பட்டு வருகிறது.

    இன்று விடியற்காலை முதல் வங்காள விரிகு டாவில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தொ டர் சாரல் மலையால் நல்ல விலை இருந்தும் பூக்களை வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரா ததால் பூக்கள் தேக்க நிலை யில் இருந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • பரிசல் சவாரி,ஆயில் மசாஜ் செய்து மகிழ்ந்தனர்
    • ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்திருந்தனர்.

    தருமபுரி.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ளது ஒகேனக்கல் சுற்றுலா தலம். காவிரி ஆறு அருவியாக ஆர்ப்பரித்துக் கொட்டும் பிரதான நீர்வீழ்ச்சி மற்றும் ஐந்தருவி பகுதிகள் பார்ப்பவர்களை தன்வசப்படுத்தும் இயற்கை கொடையாகும்.

    தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரா, கேரளம் மற்றும் புதுவை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று ஒகேனக்கலில் குவிந்தி ருந்தனர்.

    குடும்பத்தோடு குதூக லமாய் விடுமுறையை கழிக்க ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் முதலில் ஆயில் மசாஜ் செய்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.ஒகேனக்கலில் நேற்று இயல்பான சீதோசன நிலை நிலவியதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் பலரும் குடும்பத்தோடு காவிரி ஆற்றின் பாதுகாப்பான பகுதிகளில் நீராடினர். ஐந்தருவி பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியின் சாரலில் நனைந்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், இனிமையான பரிசில் பயணம் குடும்பத்தோடு மேற்கொண்டு அதே சாரல் மலையில் பரிசலில் சென்று பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    • 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்ப டுகிறது.
    • 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தருமபுரி,

    தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் 4 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்தி ருந்தது. அதனடிப்படையில் வெளியூர்களில் பணிபு ரியும் பொது மக்கள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

    தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலை யில் விடுமுறை நாட்கள் முடிந்து நேற்று மாலை முதல் பணிபுரியும் பகுதிகளுக்கு செல்ல தருமபுரி புறநகர் பேருந்து மற்றும் நகர பேருந்து நிலையத்திற்கு பொது மக்கள் குவிந்தனர்.

    தருமபுரி பேருந்து நிலை யத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ண கிரி, சேலம், கோவை, திருச்சி, நாமக்கல் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதே போல நகரப் பேருந்தில் இருந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்க ளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்ப டுகிறது. இருந்த போதிலும் புறநகர் பேருந்து நிலை யத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல அரசு பேருந்துகள் அதிக அளவு இல்லாததால் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் நகரப் பேருந்து நிலையத்தில் கிராமங்க ளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. தருமபுரி புறநகர் மற்றும் நகர பஸ் நிலையத்திலும் சட்ட ஒழுங்கு காவலர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் போக்குவரத்து காவலர்கள் உட்பட மாவட்டத்தில் சுமார் 100 க்கும் மெற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேம ராக்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    சேலம் கோட்டத்தில் மட்டும் தீபாவளி முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்களும் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் 200 கூடுதல் பேருந்துகள் இயக்கப்ப டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விளக்குகள் பழுதாகி உள்ளதால் பஸ் நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி புறநகர் பஸ்நிலையம் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பஸ்நிலையமாக உள்ளது.

    இந்த பஸ் நிலையத்திற்கு கன்னியாகுமரி, நாகர் கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வடக்கில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய பஸ் நிலையமாக இருந்து வருகிறது.

    இரவு முழுவதும் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதால் எப்போதும் பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் இருந்து வரும். இதனால் பஸ்நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ் நிலையம் முழுவதும் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கண்காணித்து வருகின்றனர். அதனால் பஸ் நிலையத்தில் பொது மக்கள் பயமின்றி இருக்கவும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும் பஸ் நிலையத்தின் நடுவே உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கோபுரத்தின் உச்சியில் 4 திசையிலும் வெளிச்சம் தெரியும் வகை யில் மெர்குரி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த மின் விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே எரிகிறது. மற்ற விளக்குகள் பழுதாகி உள்ளதால் பாதி பஸ் நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது.

    நேற்று தீபாவளி பண்டிகை முடிந்து பயணி களின் கூட்டம் குவிந்ததால் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த நிலையில் சில இளைஞர்கள் குடி போதையில் திரிவதால் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் பாதி பஸ் நிலையம் இருளில் மூழ்குவதால் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் சரிவர காட்சி படங்கள் தெரியாததால் குற்ற சம்பவத்தை தடுக்க போலீசார் திணறி வருகின்றனர்.

    எனவே பஸ் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி உயர்மின் கோபுரத்தை உடனடியாக சீர் செய்ய மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் பஸ் டிரைவர், கண்டக்டர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது
    • இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது.

    தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 59-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா இன்று காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

    தொடர்ந்து யாகசாலை–யில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வல மாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதை அடுத்து சாமிக்கு லட்சார்ச்சனை தொடங்கி–யது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று தினமும் 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் நடைபெற உள்ளது.

     விழாவின் முக்கிய நாளான வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப் பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணியசாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வான வேடிக்கை யுடன் சூரசம்ஹார விழா வும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது.

    இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், தொடர்ந்து இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் உதயகுமார், கோவில் செயல் அலுவலர் ராதாமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தி னர் செய்து வருகிறார்கள்.

    • தீபாவளி முடிந்து இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
    • வழக்கமாக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    இலங்கை அருகே கிழக்கு பகுதியை மையமாக வைத்து நீடித்துக் கொண்டிருந்த காற்று சுழற்சி தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. மேலும் கிழக்குப் பகுதியை மையமாக வைத்து மன்னார் வளைகுடா வரை நீண்ட சுழற்சி ஏற்பட்டுள்ளது.

    மேலும் வங்கக்கடல் அந்தமான் பகுதியில் இருந்து தாய்லாந்து வரை காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டு அந்தமான் பகுதியில் மையம் கொண்டுள்ளது. 2 தாழ்வு நிலை காற்றழுத்த மையங்களும் சமநிலையில் இருப்பதால் இரண்டையும் மையமாகக் கொண்டு ஒரு காற்று அழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    இந்த இணைப்பு சுழற்சியினால் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த சுழற்சியால் விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழைக்கு வாய்ப்பு இருந்தது. அதேபோல் புதுச்சேரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது.

    இலங்கை பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கில் நகரும்பொழுது தமிழகம் முழுவதும் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை காலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து தமிழகத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுத்தது. இந்த நிலையில் இன்று விடியற்காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்த சாரல் மலையால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நனைந்தவாரே பள்ளிக்கு சென்றனர். எப்போதும் பரபரப்பாக இருக்கும் உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

    தீபாவளி முடிந்து இன்று வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் கூட்டம் மட்டுமே காணப்பட்டது.

    • தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு குப்பைகள் மற்றும் பொது மக்களால் கொட்டப்பட்ட 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இவை அனைத்தும் நக ரில் உள்ள 4 நுண் உர மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் தீபாவளி பண்டிகை வழக்க மான உற்சாகத்துடன் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த தீபாவளி பண்டிகையையொட்டி தருமபுரி நகரில் உள்ள 33 வார்டுகளிலும் உள்ள அனைத்து தெருக்களிலும் பொது மக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பட்டாசுகள் வெடித்தும் மத்தாப்புக்கள் கொளுத்தியும் கொண்டாடினர். இந்த பட்டாசு குப்பைகள், வீடுகளில் இருந்து கொட்டப்படும் இனிப்பு பெட்டிகள், ஜவுளி குப்பைகள் என சுமார் 40 டன் தீபாவளி குப்பைகள் தெருக்களில் கொட்டப்பட்டது.

    இந்த தீபாவளி குப்பைகள் அனைத்தும் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, ஆணையாளர் புவனேஸ்வரன் ஆகியோர் ஆலோசனைப்படி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜ ரத்தினம், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன் சுசீந்திரன், ரமணசரண், நாகராஜன் மற்றும் துப்புரப் பணியாளர்கள் இன்று காலை முதல் அகற்றும் பணியில் தீவிரமாக ஏற்பட்ட னர். இந்த குப்பைகள் அனைத்தும் தருமபுரி நகரில் உள்ள பச்சியம்மன் கோவில் மயானம், குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் கோவில் மயானம், சந்தைப் பேட்டை, மதிகோன்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரமையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்க அனுப்பி வைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×