search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்க சாமி தலைமையில் நடந்தது.
    • வணிகர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஜவுளி கடைகளில் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் அணிந்து வரும் நகைகள் காணாமல் போ னால் கடை உரிமையா ளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என தருமபுரி போலீஸ் நிலையத்தில் நடை பெற்ற ஜவுளி கடை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தெரிவித்தார்.

    தருமபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் ஜவுளி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்க சாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து ஜவுளி கடைகளிலும் முன்பு றம் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும், பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறதா என சோ தனை செய்ய வேண்டும்.

    கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்க ளுக்கு தனியாக செக்யூரிட்டி நியமித்துக்கொள்ள வேண்டும். ஜவுளி கடைகள் முன்பு டூ வீலர்கள் திருடு போனால் கடை உரிமையா ளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

    ஜவுளி கடையின் உள்புறமோ வெளிப்புறமோ தங்க நகைகள் காணாமல் போனால் கடை உரிமையா ளர்களே பொறுப்பேற்க வேண்டும், சாலையில் விளம்பர பேனர்களை வைக்க கூடாது, போக்கு வரத்திற்க்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்ப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    • கல்லூரி முடித்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார்.
    • அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

     . தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மருகாலம் பட்டி சார்ந்தவர் சரவணன், இவரது மகள் ஜெயப்பிரதா (வயது 24). இவர் கல்லூரி முடித்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவருக்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டின் பின்புறம் சென்றார். நீண்ட நேரமாகி யும் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஜெயபப்பிரதா கிணற்றில் குதித்ததற்கான அறிகுறிகள் தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக பாப்பி–ரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், தீய ணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த ஜெயபிரதாவின் உடலை பிணமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, கிணற்றில் விழுந்து இறந்த ஜெயப்பிரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி அருகே கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • புதியதாக டைல்ஸ் போடும் பணி தீவிரம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் தென் பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான விநாயகர் மற்றும் சுப்பிரமணிய முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு பல ஆண்டுகளாக சிவன் கோயில் உள்ள இடத்தில் கருங்கற்களால் படிகள் அமைத்துள்ள நிலையில் இந்த இடத்தில் பல ஆண்டு களாக தை பொங்கல் அன்று பெண்கள் பொங்கல் வைத்தும், கால் நடைகளுக்கு அலங்காரம் செய்து வழிபட் டுவது வழக்கம். மேலும் இறந்தவர்களுக்கு பொது மக்கள் படித்துறையில் ஈமச்சடங்குகள் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த சிலர் அறங்காவலர் என்று கூறிக்கொண்டு பல ஆண்டு கள் பூஜைகள் செய்யும் படித்துறையில் புதியதாக டைல்ஸ் போடும் பணிக்கு தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்து அறநிலைத்துறை செய லை கண்டித்தும் ஊர் பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் ஒருநாள் உண்ணாவிரதம் மேற் கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீ சார் மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமுருகன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை போராட்டம் கைவிடப் பட்டது. 

    • தருமபுரி அருகே போக்குவரத்து வசதியில்லாமல் 3 கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாணவ, மாணவிகளும் வந்து செல்ல முடியாத அவல நிலை

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கடமடை, எர்ரனஅள்ளி, கிருஷ்ணன் கொட்டாய் கிராம மக்கள் தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கிராம மக்கள் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலம் நெரலூரு விலிருந்து தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை வரை நான்கு வழிச்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தருமபுரி பாலக்கோடு சாலையில் உள்ள கடமடை கிராமத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க கையப்படுத்திய இடங்களில் நெடுஞ்சாலை துறையினர் தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.

    சர்வீஸ் ரோடு அமைக்காவிட்டால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை கொண்டு செல்லவும் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாது. அதே போல 3 கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் வெளியூர் வந்து செல்லவும், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளும் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

    எனவே சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் அமைப்பதை விடுத்து தார் சாலை அமைத்து தரவேண்டும் என அந்த மனுவில் தெரி வித்துள்ளனர். 

    • இரவு முழுவதும் விடிய விடிய நல்ல மழை பெய்துள்ளது.
    • மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

    தருமபுரி:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்று சுழற்சியின் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இருந்து மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. இதனையடுத்து இரவு முழுவதும் விடிய விடிய நல்ல மழை பெய்துள்ளது.

    தருமபுரி 20 மில்லி மீட்டர், பாலக்கோடு 83.2, மில்லிமீட்டர், மாரண்டஅள்ளி 22. மில்லி மீட்டர், பென்னாகரம் 52. மில்லி மீட்டர், ஒகேனக்கல் 5.4 மில்லி மீட்டர், அரூர் 11.2 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 51 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 255.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக பாலக்கோட்டில் 83.2 மி.மீ பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

    • 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.
    • பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மாரண்டஅள்ளி:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக பெய்ய தொடங்கி விடிய, விடிய பெய்தது.

    இதைத்தொடர்ந்து பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனணயின் நீர்வரத்து பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக இன்று காலை திடீரென நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் சின்னாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியது. சின்னாற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாலக்கோட்டில் உள்ள பஞ்சப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 49 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 39 அடி அளவு உயர்ந்துள்ளது.

    சின்னாறு செல்லும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி. பஞ்சப்பள்ளி, சாமனூர், தொல்லகாது உள்ளிட்ட பகுதிகளில் ஆறு செல்லும் வழித்தடங்களில் வெள்ள பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கோவிலை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்து உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் பச்சையம்மன் கோவில் மற்றும் திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 23 ந் தேதி வழக்கம்போல் கோவில் பூஜையை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி விட்டு சென்றுள்ளார்.

    மறுநாள் காலை அர்ச்சகர் சென்று பச்சையம்மன் கோவிலை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்து உள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் உள்ளே சென்று பார்த்தபோது 5 பவுன் தங்க நகை மற்றும் 2 பவுன் தாலி திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .

    அதேபோல் அதே பகுதியில் உள்ள திமிராய பெருமாள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் உண்டியல் இருந்த நகை மற்றும் பணமத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர். கொள்ளை போன நகைகள் 9 பவுன் என தெரிகிறது. இது குறித்து கோவில் அர்ச்சகர் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.
    • தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    காரிமங்கலம்:

    வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழி விற்பனைகளை கட்டியது. தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக வியாபாரிகள், கறி கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் அதிக அளவில் ஆடுகள் மற்றும் கோழி வாங்கி சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தையில் ஆடு, கோழி விற்பனைகளை கட்டியது. தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது வழக்கம்.

    அதனை தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கறி விருந்து நடைபெறும். அதற்கு இன்று கூடிய சந்தையில் ஆடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.

    வழக்கத்தை விட இந்த வாரம் கூடிய ஆட்டு சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    காரிமங்கலம் பகுதியில் தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    கடந்த வாரம் 10, 15 கிலோ கொண்ட ஆடு 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.
    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் கரையோர பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் மழை குறைந்ததால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

    மேலும், கர்நாடகா மாநிலத்தில் தண்ணீர் விட மறுத்து அந்த மாநில அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி அளவில் வினாடிக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை பொய்த்து போனதால் கடந்த சில நாட்களாக அங்குள்ள அணைகளில் இருந்து நீர்திறப்பு முற்றிலும் நிறுத்திவிட்டதால், தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தடையும். கடந்த சில நாட்களாக கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், அவ்வப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையாலும் கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 1500 கனஅடியாக நீடித்து வந்து கொண்டிருந்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அளவு குறைந்து பாறை திட்டுகளாக காட்சியளித்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகின்றன.

    இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக தற்போது அதிகரித்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

    திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன.

    மேலும் தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, பெய்யும் மழையைப் பொறுத்து அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

    • தருமபுரியில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது.
    • 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி மற்றும் ராயக்கோட்டை பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் ராயக் கோட்டை, ஜிட்டாண்ட அள்ளி, ஐந்து மைல்கள், பாலக்கோடு, வெள்ளிச் சந்தை உள்ளிட்ட தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்க ளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்வதால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ. 1.50 வாங்கி நடவு செய்தனர். இருந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பி.கொல்ல அள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமன அள்ளி, கரகூர், திருமல்வாடி, உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ. 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். நோய் தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து கடுமையாக சரிந்துள்ளது.

    இதனால் தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்து கிலோ தக்காளி மொத்த விற்பனைக்கு ரூ. 25-க்கும் சில்லறை விற்பனையாக ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தீபாவளியை யொட்டி தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.  

    • நல்லம்பள்ளி அருகே இ இருசக்கர வாகனத்தின் மீது கண்டெய்னர் லாரி மோதி டிலைவர் பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம் பள்ளி அடுத்த சிவாடியில் தனியார் பெட் ரோலிய நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனத்தில் மேச்சேரி பள்ளப் பட்டியைச் சேர்ந்த அம்மாசியின் மகன் வெங்கடேசன் (43) என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் பாகலஅள்ளி அருகில் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி படுகாயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதப மாக உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீஸ் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பென்னாகரம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் விபரீத முடிவு

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மிட்ட தாரர் தெருவைச் சேர்ந்தவர் நசீர்பாஷா. இவரது 2-வது மனைவி ஷம்சாத் (வயது48). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசீர்பாஷா இறந்து விட்டார். இந்த நிலையில் ஷம்சாத் தனது மகன் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்தார். ஷம்சாத்துக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதியடைந்தார். இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு 11மணியளவில் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷம்சாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நசீர்பாஷா–வின் மகன் மஹப்பூஷா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×