என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
3 சக்கர சைக்கிளுக்காக 5 வருடமாக மாற்றுத்திறனாளி தவிப்பு
Byமாலை மலர்22 Aug 2022 11:25 AM IST
- 3 சக்கர சைக்கிளுக்காக 5 வருடமாக மாற்றுத்திறனாளி தவித்து வருகிறார்.
- ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு டி.பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (வயது 35). 2 கால்களும் முற்றிலும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியான இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.
அவர் தெரிவிக்கையில், எனது தந்தை மாரியப்பன் இறந்து விட்டார். 3 சகோதரர்களும் திருமணம் ஆகி தனியாக சென்று விட்டனர். நான் எனது வயிற்று பிழைப்புக்காக சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டி வருகிறேன்.
என்னால் தாடிக்கொம்புவில் இருந்து பள்ளப்பட்டிக்கு 3 கி.மீ தூரம் வருவது கடினமாக உள்ளது. எனவே மோட்டார் பொருத்திய 3 சக்கர வாகனம் வழங்க கேட்டு கடந்த 5 வருடமாக மனு அளித்துள்ளேன். ஆனால் இது வரை வழங்கப்படவில்லை.
எனவே எனது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்க மனு அளிக்க வந்துள்ளேன் என்றார்.
Next Story
×