search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
    X

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர்.

    திண்டுக்கல்லில் கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

    • கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பாக மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

    போராட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், தேனி மாவட்ட செயலாளர் ராஜன், கரூர் மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தொடக்க உரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் பூசாரி உள்பட நிர்வாகிகள் விளக்க உரையாற்றினர்.

    கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். 6வது ஊதியக்குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை-1 மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்திட வேண்டும்.

    தமிழகத்தில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. அரசு தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

    கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்தக்கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    Next Story
    ×