search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை பட்டத்துக்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறப்பு
    X

    குறுவை பட்டத்துக்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறப்பு

    • சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203 ஆக அறிவித்துள்ளது.
    • விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் 2023-24 காரீப் சந்தை பருவத்தில் குறுவை பட்ட நெல் அறுவடையை யொட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

    பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 2023-24-ம் காரீப் சந்தை பருவத்துக்கு அரசால் நெல்லுக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்பட்டு ள்ளது.

    சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2 ஆயிரத்து 203, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 183 என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஊக்கத் தொகையாக சன்ன ரக நெல்லுக்கு குவிண்டா லுக்கு ரூ.107, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 82 அறிவித்துள்ளது.

    இதன் மூலம், மொத்தம் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 310, பொது ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2 ஆயிரத்து 265 கொள்முதல் தொகையாக (ஊக்கத்தொகை உட்பட) வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×